New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/02/deepak-dinakar-2025-07-02-17-38-54.jpg)
திரைப்படங்களிலும் நடித்துள்ள தீபக் தினகர், கடைசியாக சமுத்திரக்கனி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விநோதய சித்தம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சின்னத்திரையின் முன்னணி நடிகராக வலம் வரும் தீபக் தினகர் பல சீரியல்களில் நடித்துள்ள நிலையில், சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது இவரின் ஹோம்டூர் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
1999-ம் ஆண்டு விஜய் டிவியின் ஜனனம் எக்ஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தீபக் தினகர். அதன்பிறகு, அக்னி சாட்சி, அண்ணி, கீதாஞ்சலி, மலர்கள், ரோஜா கூட்டம் என பல தொடர்களில் நடித்திருந்தாலும் தீபக்கு சற்று திருப்புமுனை கொடுத்த சீரியல் திருமதி செல்வம். இந்த சீரியலில் நாயகன் சஞ்சீவ் தான் என்றாலும், தீபக் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு சன்டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் தான் தீபக்கிற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 6 வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியலில், தமிழ் என்ற கேரக்டரில் தீபக் நடிக்க, அவருக்கு ஜோடியாக, ஸ்ருதிராஜ் நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு 2021-ம் ஆண்டு விஜய் டிவியின் தமிழிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகனாக நட்சத்திரா நாகேஷூடன் நடித்திருந்தார்.
சீரியல் மட்டுமல்லாமல், விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், தொகுப்பாரளாகவும் பங்கேற்றுள்ள தீபக் தினகர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் பங்கேற்று, 98 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். திரைப்படங்களிலும் நடித்துள்ள தீபக் தினகர், கடைசியாக சமுத்திரக்கனி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விநோதய சித்தம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும், இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்த தீபக் தினகரின் ஹோம் டூர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன், முன் ஒரு சிறிய கார்டன் இருக்கிறது. அந்த கார்டனில் ஏதாவது வேலை செய்வது, ஒன்றும் இல்லை என்றால், கார்டனில் இருக்கும் தொட்டிகளை புதிதாக வாங்குவது போன்ற வேலைகள் தான் தீபக்கின் மனைவிக்கு பெரிய பொழுதுபோக்காம்
அதேபோல் வீட்டுக்குள் மூங்கிலில் செய்யப்பட்ட மரங்கள் போன்ற அமைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த அமைப்பை வடிவமைத்தவர், பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி என்று தீபக்கின் மனைவி கூறியுள்ளார். அதேபோல் வீட்டுக்குள் இருக்கும் சுவற்றில், கொடைக்கானலில், வியூ பாயிண்ட் முன்பு இருந்தால் என்ன தெரியுமோ அதை அப்படியே அவரது நண்பர் பெயிண்டிங் செய்து கொடுத்துள்ளார். இந்த பெயிண்டிங் அங்கு மாட்டியுள்ளது.
வீட்டுக்கு உள்ளே, ஒரு பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது, அதேபோல் சின்னத்திரையில் தான் வாங்கிய விருதுகளை அடுக்கி வைத்துள்ளார். அதேபோல் அவரது மகன், பியோனோ கற்றுக்கொள்கிறார். அதன்பிறகு மற்ற அறைகளை காட்டும் தீபக், சின்ன வீடாக இருந்தாலும், நிம்மதியாக சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்று தீபக் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.