திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்க வந்தபோது மற்ற கலைஞர்களை பலரும் போட்டோ எடுத்தபோது என்னை ஒருவர் மட்டுமே போட்டோ எடுத்தார். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு ஏன் வந்தோம் என்று நினைத்தேன் என்று மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையில் 10 வருடங்கள் பணியாற்றிய டெல்லி கணேஷ், அதன்பிறகு நாடகங்களில் நடிக்க தொடங்கினார். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பல கேரக்டரில் நடித்து அசத்தியுள்ள டெல்லி கணேஷ், இயக்குனர் பாலச்சந்தர், விசு உள்ளிட்ட இயக்குனர்கள் இயக்கிய பெரும்பாலான படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக விசு இயக்கிய சிதம்பர ரகசியம் படத்தில் மெயின் வில்லனாக நடித்து அசத்தியவர் டெவல்லி கணேஷ்.
தமிழ் மலையாளம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். அதேபோல் டெப்பிங் கலைஞராகவும், சில நடிகருக்கு குரல் கொடுத்துள்ளார். இப்படி பல திறமைகளை உள்ளடக்கிய டெல்லி கணேஷ் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் என்னை எந்த விருது விழாவுக்கும் அழைப்பதில்லை. எனக்கு யாரும் விருதுகளும் கொடுப்பதில்லை என்று கூறியிருந்தார்.
இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசு விருது பெரும் விழாவில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார். 1979-ம் ஆண்டு வெளியான பசி படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசின் விருதை பெற்றிருந்தார். இதற்காக, இந்த படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றிருந்த நிலையில், அனைவரையும் புகைப்பட கலைஞர்கள் பலரும் போட்டோ எடுத்துள்ளனர். ஆனால் டெல்லி கணேஷை ஒருவர் மட்டுமெ போட்டோ எடுத்துள்ளார்.
இதை கவனித்த டெல்லி கணேஷ், ஏண்டா இந்த விழாவிற்கு வந்தோம் என்று நினைத்துன்னார். அப்போது அவரை பார்த்த எம்.ஜி.ஆர், கணேஷ் இங்க வாங்க, என்று அழைத்து அவரின் தோள்மீது கைபோட்டு போட்டோ எடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது எல்லோரையும் ஒரே மாதிரி எடுங்கப்பா என்று போட்டோஃகிராபர்களுக்கு எம்.ஜி.ஆர் அறிவுரை கூறியுள்ளார். இதை பார்த்த டெல்லி கணேஷ் ஆனந்த கண்ணீர் விட்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“