New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/29/devan-home-tour-2025-06-29-11-27-03.jpg)
தேவன், 1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எவர்கிரீன் ஹிட் படமான பாட்ஷா படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக கலக்கிய நடிகர் தேவன், வீட்டு ஹோம் டூர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் தேவன் ஸ்ரீனிவாசன். தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகர் தேவன் என்று அறியப்படும் இவர், 1983-ம் ஆண்டு நாதம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்த இவர், 1984-ம் ஆண்டு வெள்ளம் என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார். பிரேம் நசீர், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் 5 வருடங்களாக தயாரிப்பில் இருந்துள்ளது.
தொடர்ந்து 1993-ம் ஆண்டு அர்ஜூன் இயக்கி நடித்த பிரதாப் என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமகமான தேவன், அடுத்து ஜெய்ஹிந்த் படத்தில் அர்ஜூனுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அடுத்து சரத்குமாருடன் கேப்டன், விஜயகாந்துடன் ஹானஸ்ட்ராஜ், ஆகிய படங்களில் நடித்திருந்த தேவன், 1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எவர்கிரீன் ஹிட் படமான பாட்ஷா படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
பாட்ஷா படம் தேவனுக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்த நிலையில், அடுத்து பல படங்களில் வில்லனாக கமிட் ஆக தொடங்கினார். இவர் நடித்த பல படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களாக அமைந்தது. கடைசியாக நயன்தாரா அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்த தேவன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 73 வயதாகும் தேவன், கேராவின் திருச்சூரில் வசித்து வருகிறார்.
அவரின் ஹோம்டூர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிகைண்ட்வுட்ஸ் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், தேவன் தனது வீட்டை சுற்றி காட்டுகிறார். தனக்கு சமைக்கவே தெரியாது என்றும், சமைத்தால் சாப்பிடுவேன் என்று கூறும் தேவன், தனக்கு பிடித்த சாப்பாடு பழைய கஞ்சி என்று கூறியுள்ளார். மேலும் ஆம்லேட் எனக்கு போட தெரியும் என்று கூறியுள்ள அவர், எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து சைகையில் செய்து காட்டியுள்ளார்.
அவரது வீட்டு ப்ரிட்ஜில், பல பொருட்கள் அடுக்கி வைத்துள்ளார். சூப்பர் மார்க்கெட் ரேக்கில் அடுக்கி வைத்தது போல் தோற்றம் அளிக்கிறது அவரது வீட்டு ப்ரிட்ஜ். அதன்பிறகு சமைக்கும் அறை, அவரது படுக்கை அறை, டைனிங் ஹால், என அனைத்தையும் சுற்றி காட்சியுள்ளார். இடையில், காட்டுக்குள் ஒரு மரத்தடியில் இருக்கும் யானை படம் அவரது வீட்டு டிவி ரூமில் உள்ளது. இது புகைப்படம் அல்ல பெயிண்டிங் தனது நண்பர் தனக்காக வரைந்து கொடுத்தது என்று கூறியுள்ளார்,
வீட்டை சுற்றிலும் மரங்கள், இயற்கை சூழலுடன் காட்சியளிக்கும் இந்த வீட்டில் மொட்டை மாடியில் இயற்கை அழகை ரசித்தபடி இருக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும் என்று கேட்டபோது முதல் காதலின் நினைவு வரும் என்று கூறியுள்ளார் தேவன். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.