78-வது சுதந்திர தினம்: கவனம் ஈர்க்கும் இயக்குனர் அட்லி பதிவு; தனுஷ் போட்டோ வைரல்!

இந்தியாவில் 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இயக்குனர் அட்லி மற்றும் தனுஷ் இருவரும் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இந்தியாவில் 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இயக்குனர் அட்லி மற்றும் தனுஷ் இருவரும் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Dhanush Atlee

இந்தியாவில் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திரைப்பட இயக்குனர் அட்லி, இது குறித்து வெளியிட்டுள்ள பதிவு பலரின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடிப்பில், தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த அவர், அடுத்து பாலிவுட்டில், ஷாருக்கான் நடிப்பில், ஜவான் என்ற படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், ரூ1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து அட்லி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வரும் நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்து வருகிறது. பொதுவாக தனது படங்களில் சமூகவத்தில் நடக்கும் அவலங்களை காட்சிகளாக வைத்து கவனம் ஈர்த்து வரும் அட்லி தற்போது தனது சமூகவலைதள பதிவின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அட்லி வெளியிட்டுள்ள பதிவில்,

Advertisment
Advertisements

எப்போது ஒரு பெண் சுதந்திரமாக சாலையில் நடமாடுகிறாளோ அப்போது இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லலாம் என மகாத்மா காந்தியின் வரிகளை பதிவிட்டு, இரு பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்திச்செல்லும் வகையில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அதே போல் சமீபத்தில் வெளியான ராயன் படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட இயக்குனரும் நடிகருமான தனுஷ், பெரிய தேசிய கொடியை கையில் ஏந்தியபடி வெளியிட்டுள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Atlee

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: