கடந்த 2022-ம் ஆண்டு தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்த நடிகர் தனுஷ், தற்போரது ஐஸ்வர்யாவின் சமூகவலைதள பதிவுக்கு லைக்ஸ் கொடுத்து வருவதால் இவர்கள் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், நடிகர் இயக்குனர் தாயரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் ரூ100 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து தற்போது தெலுங்கில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்து, ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2004-ம் ஆண்டு இயக்குனரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரு பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வருகிறது என்று கூறியிருந்தனர்.
இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் பிள்ளைகளுக்காகவாது சேர்ந்து வாழ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். தொடர்ந்து, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த போதிலும், இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. இதனிடையே சமீபத்தில், ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு தனுஷ் லைக்ஸ் கொடுத்து வருகிறார்.
ஐஸ்வர்யா ஓணம் கொண்டாடும் படங்களை வெளியிட்டிருந்த நிலையல், இந்த பதிவுக்கு தனுஷ் லைக்ஸ் கொடுத்திருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விவாகாரத்து முடிவுக்கு பின், தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருந்த நிலையில், ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான ஒரு ஆல்பம் பாடலுக்கு தனுஷ் வாழ்த்துக்கள் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் வெளியானது. அதேபோல் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் ராயன் படம் வெளியான நிலையில், தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியாக தங்களது மகன்களுடன் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. சமீபத்தில் ராயன் பட இசை வெளியிட்டு விழாவில், தான் சிறு வயதில் ரஜினிகாந்தை பார்க்க அவரது வீட்டுக்கு சென்ற நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
இதனிடையே தற்போது சமூகவலைதளங்களில் ஐஸ்வர்யாவின் பதிவுகளுக்கு தனுஷ் லைக்ஸ் கொடுத்து வருவது, அவர்கள் மீண்டும் இணைவதற்கான அறிகுறியா அல்லது சாதாரண நிகழ்வா என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“