scorecardresearch

போயஸ் கார்டன் புது வீடு கிரகப் பிரவேசம்: தனுஷ் மகன்களும் மிஸ்ஸிங்!

கடந்த 2006-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷ்க்கு யாத்ரா லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

போயஸ் கார்டன் புது வீடு கிரகப் பிரவேசம்: தனுஷ் மகன்களும் மிஸ்ஸிங்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர், பாடகர் என பன்முக திறமைகளை தனக்குள் வைத்துள்ள முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாளிலேயே வாத்தி படம் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ், அடுத்து கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷ்க்கு யாத்ரா லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிரிவுக்கு பிறகு தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை மாறி மாறி பகிர்ந்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து தனுஷ் தனது பட வேலைகளிலும், ஐஸ்வர்யா தனது இயக்கத்தின் பணிகளிலும் மும்பரமாக களமிறங்கிய நிலையில்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். இந்த வீட்டுக்கு அஸ்திவாரம் அமைத்தது முதல் இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது.

150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வீட்டை தனுஷ் தனது பெற்றோருக்கு வழங்கியுள்ளார். தற்போது தனுஷின் புதிய வீடு பணிகள் அனைத்தும் முடிந்து சமீபத்தில் கிரகபிரவேஷம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டில் தனுனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியானது.

ஆனாலும் இந்த வீட்டில் கிரகபிரவேச நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா உட்பட ரஜினிகாந்த் குடும்பத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. மேலும் சமீப காலமாக தான் எங்கு சென்றாலும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வரும் தனுஷ் இந்த கிரகபிரவேக புகைப்படங்களில் மகன்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் ஒன்றும் வெளியாகவில்லை. இதனால் மகன்களையும் தனுஷ் ஒதுக்கிவி்ட்டாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor dhanush new home function aishwarya and son missing

Best of Express