43 வயதில் தந்தையான பிரபல நடிகர்
மிஷ்கின் இயக்கத்தில் வெளியாக சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நரேன். தொடர்ந்து அஞ்சாதே, முகமூடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கார்த்தியின் கைதி, கமலின் விக்ரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நரேன், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே நரேன கடந்த 2007-ம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு தன்மயா என்ற மகள் உள்ளார். இதனிடையே நரேன் மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்
அமிதாப் பச்சன் உயரம் தான் அவருக்கு எதிரியா?
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் உயரமான நடிகராகவும் பார்க்கப்படுகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் உயரம் குறைவாக இருப்பவர்களை தான் விரும்புவதில்லை என்று ஒரு சிறுமி கூறியுள்ளார். இதற்கு உதாரணம் சொன்ன அமிதாப், தான் சிறுவயதில் படித்த பள்ளியில், குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நான் உயரம் அதிகமாக இருந்ததால் என்னை பயிற்சி செய்ய விடாமல் சீனியர் டீமில் சேர்த்துவிட்டார்கள். என் உயரம் காரணமாக நான் என்னை விட பெரியர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
தள்ளிப்போன விஜய்சேதுபதி படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்சேதபதி மேரி கிறிஸ்துமஸ் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக இருந்த நிலையில், படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியாததால், படத்தின் வெளியீடு அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்து உண்மை சம்பவத்தை கையில் எடுக்கும் எச்.வினோத்
சதுரங்க வேட்டை படத்தில் ஏமாற்று வேலை, தீரன் படத்தில் தமிழக போலீசார் செய்த சாகசம் என முதல் இரண்டு படங்களிலும் உண்மை சம்பத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்திருந்த இயக்குனர் எச்.வினோத் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு துணிவு படத்திலும் உண்மை சம்பவத்தை கையில் எடுத்துள்ளார். இதனிடையே எச்.வினோத் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தது திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் பற்றிய த்ரிஷாவின் கருத்து
த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், இது தொடர்பான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா நான் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. இதுவரை எதிர்மறையாக கருத்துக்களை நான் எடுத்துக்கொள்வதில்லை. நேர்மறையாக கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். எனக்கும் அரசியலுக்கு துளிகூட சம்மந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“