Advertisment

''இதுவே சிறந்த பிளாக்பஸ்டர்'': ராயன் படம் குறித்து நடிகர் தனுஷ் வைரல் பதிவு

சமீபத்தில் வெளியான ராயன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்', நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Raayan review

ராயன் படத்தில் தனுஷ்

நடிகரும் இயக்குனருமான தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் கடந்த ஜூலை 26-ந் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ராயன் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனா, தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து, பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் அடுத்ததாக ராயன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். அவரின் 50-வது படமான இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷூடன், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், அபர்னா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் ஜூலை 26-ந் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மததியில் வெளியாக ராயன் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை.

தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ராயன், ஆந்திர மற்றும் பாலிவுட்டில் கல்கி படத்திற்க எதிராக வசூலில் கடும் போராட்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் இந்த படம் வசூலை குவித்து வரும் நிலையில், ராயன் படத்தை வெற்றிப்படமாக மாற்றி ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில், உங்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் எனக்குப் பொழிந்த பார்வையாளர்கள், திரையுலக சகோதரத்துவம், நண்பர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மற்றும் எனது ஆதரவின் தூண்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.  இதுவே சிறந்த பிளாக்பஸ்டர் (BLOCKBUSTER) பிறந்தநாள் பரிசு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment