/indian-express-tamil/media/media_files/dD954L1QkOEKkHVdTFXe.jpg)
தங்கலான் - ராயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில், கடைசியாககடந்த 2022-ம் ஆண்டு கோப்ரா திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தது. அதன்பிறகு பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெளியாகிய நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்துள்ளார்.
2024-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் தங்கலான் படம், கடந்த ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் தாமதமானதால் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப்போனது. இந்த படம் குறித்து ஏற்கனவே ஒரு டீஸர் வெளியிடப்பட்டாலும், இயக்குனர் பா ரஞ்சித் தங்கலான் குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்த படத்தில் விக்ரம் தவிர, இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட்நடிகர் டேனியல் கால்டாகிரோன் மற்றும் தமிழ்த் துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இதனிடையே இந்த படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே மாதம், தனது இயக்கத்தில் தயாராகியுள்ள 2-வது படமான ராயன் படத்தை வெளியிடவும் நடிகர் தனுஷ் முடிவு செய்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி வரும் ஜூன் மாதம் 13-ந் தேதி இரு படங்களும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி வெளியானால் விக்ரம் – தனுஷ் இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகும். பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் 2-வதாக இயக்கியுள்ள படம் ராயன். எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார். சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us