/tamil-ie/media/media_files/uploads/2023/08/Jailerm.jpg)
ரஜினிகாந்த் - தனுஷ்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்னும் ஓரிரு நாட்களல் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு நடிகரும் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனுமான தனுஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், யோகி பாபு, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
It’s JAILER week 😁😁😁
— Dhanush (@dhanushkraja) August 7, 2023
அந்த வகையில் நடிகரும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் முன்னாள் கணவருமான தனுஷ் ஜெயிலர் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் தனது ட்விட்டர் பதிவில், இது ஜெயிலர் வாரம் என்று பதிவிட்டுள்ளார். மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக தனுஷ் அறிவித்தை தொடர்ந்து ரஜினி தனுஷ் இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஜெயிலர் படத்திற்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.