இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தள்ள நடிகர் தனுஷ் தற்போது இயக்கம் மற்றும் நடிப்பு என தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் நிலையில், தற்போது அவர் மீண்டும் ஹாலிவுட் படத்தில் முன்னணி நடிகையுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொணடவர் தனுஷ். சமீபத்தில் இவர் இயக்கி நடித்த அவரின் 50-வது திரைப்படமான ராயன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் தெலுங்கில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்து அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு சமீபத்தில் இந்த படத்தின் பூஜையும் போடப்பட்டது. மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல படங்களை கைவசம் வைத்து நடித்து வரும் தனுஷ் தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
இதனிடையே அவ்வப்போது வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் தனுஷ் தற்போது, லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சோனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற படத்தில் நடிகர் தனுஷ், அமெரிக்க நடிகர் சிட்னி ஸ்வீனியும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது அதிகாரப்பூர்வ இல்லை என்றாலும், இந்த படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எபோரியா (Euphoria) மற்றும் தி வொயிட் லோட்டர் (The White Lotus) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட சிட்னி ஸ்வீனி, 1990களின் தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த கிறிஸ்டி மார்ட்டின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கான படப்பிடிப்பை முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு பிறகு ஸ்ட்ரீட் ஃபைட்டரில் தனது ஈடுபாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்வீனி தற்போது நிச்சயமற்றதாகச் செய்து, நடந்துகொண்டிருக்கும் பல உறுதியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும், தனுஷ் தனது இயக்கம் மற்றும் நடித்து வரும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தி கிரே மேன் படத்தின் மூலம் ஹாலிவுட் திரைத்துறையில் அறிமுகமான தனுஷ், அடுத்து சிட்னி ஸ்வீனியுடன் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சோனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எப்போது வெளியிடும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil