/indian-express-tamil/media/media_files/2024/10/26/6fHnwq0wonyPlovYJGwL.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் நடிகை தர்ஷா குப்தா ராம்ப் வாங் நடந்தது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், நடிகர் ரஞ்சித், தீபக், தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா, வி.ஜே.விஷால், ஜாக்குவலின், அர்னவ், சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் இருந்தே விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இந்நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில், எலிமினெஷன் நடந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, ஒரு வாரத்தில் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு, பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் கடந்த சீசனில், பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என இரு வீடுகள் இருந்தது.
அதேபோல் இந்த சீசனிலும் இரு வீடுகள் உள்ள நிலையில், ஆண்கள் அணி பெண்கள் அணி என இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகர் அர்னவ் நடிகை தர்ஷனா ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்படட நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
Dharsha Gupta Ramp Walk 💃#BiggBossTamil8#BiggBossTamil#BiggBoss8Tamil#BiggBossTamilSeason8
— Sekar 𝕏 (@itzSekar) October 25, 2024
pic.twitter.com/9FA0kbSfMS
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் தற்போ பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் நடிகை தர்ஷா குப்தா ராம்ப் வாக் நடத்த நிகழ்வு வீடியே பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தர்ஷா குப்தாவின் நடையை பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கத்தி கூச்சலிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.