தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்? கோலிவுட் பரபரப்பு

இந்தியன் 2, படத்தில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியன் 2, படத்தில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan Thug Life Dul
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் கமிட் ஆனா நடிகர் துல்கர் சல்மான் தற்போது அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுதி வருகிறது.

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்த நடிகர் கமல்ஹாசன் அடுத்து இந்தியன் 2, படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த படத்தில் ஜெயம்ரவி, த்ரிஷா, நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் இருந்து தற்போது பிரபல நடிகர் துல்கர் சல்மான் விலகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துல்கர் சல்மானுக்கு மாற்றாக விரைவில் ஒரு நடிகர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், படத்தின் அடுத்த படப்பிடிப்பிற்காக படக்குழு செர்பியாவுக்கு சென்றுள்ள நிலையில், துல்கர் சல்மான் விலகியது குறித்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல் சுதா கொங்கரா இயக்கும் 'சூர்யா 43' படப்பிடிப்பில் துல்கர் சல்மான் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நஸ்ரியா நஜிம், துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: