6 குழந்தைகள் அப்பாவுடன் காதல்; திருமணம் செய்யாமல் தாயான தமிழ் நடிகை: இவரது மகள் பாலிவுட் ஸ்டார்!

முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், தமிழ் நடிகரை காதலித்த நடிகை புஷ்பவள்ளி, கடைசிவரை அவரது காதலியாகவே இருந்தார். இவரது மகள் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை.

முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், தமிழ் நடிகரை காதலித்த நடிகை புஷ்பவள்ளி, கடைசிவரை அவரது காதலியாகவே இருந்தார். இவரது மகள் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை.

author-image
WebDesk
New Update
Pushpavalli

தென்னிந்தியாவில் பிறந்து தமிழ் நடிகரை காதலித்து, திருமணம் செய்யாமல் 2 குழந்தைகளுக்கு தாயான ஒரு முன்னணி நடிகை, தனது மகளை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற்றியுள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா?

Advertisment

தென்னிந்தியாவில் பிறந்து, பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில், ஹேம மாலினி, ரேகா, வைஜெயந்திமாலா, ஜெயபிரதா, ஸ்ரீதேவி எனப் பலர் உள்ளனர். இவர்களில் நடிகை ரேகா கொஞ்சம் வித்தியாசமானவர். அவரது அம்மா புஷ்பவள்ளி பல தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெமினி கணேசனை காதலித்த புஷ்பவள்ளி, அவரை திருமணம் செய்யாமலே 2 குழந்தைகளுக்கு தாயானார். அவருக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளில் ஒருவர் தான் நடிகை ரேகா.

1936-ம் ஆண்டு வெளியான 'சம்பூர்ண இராமாயணம்' திரைப்படத்தில் சீதையாக நடித்ததன் மூலம் புகழ்பெற்ற புஷ்பவள்ளி, இந்த கேரக்டரில் நடித்ததற்காக 300 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. 1942-ல் வெளியான தெலுங்குப் படமான 'பாலா நாகம்மா' புஷ்பவள்ளிக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 1947-ல் வெளியான 'மிஸ் மாலினி' திரைப்படத்தில் புஷ்பவல்லி முக்கிய கதாநாயகியாக நடித்தார். இப்படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

புஷ்பவல்லி தனது சினிமா வாழ்க்கையை விட, தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் அதிகம் பேசப்பட்டார். 1940-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட புஷ்பவள்ளி, ஆறு வருடங்களில் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்தார். 'மிஸ் மாலினி' திரைப்படத்தில் புஷ்பவல்லி கதாநாயகியாகவும், ஜெமினி கணேசன் புதிய நடிகராகவும் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. அப்போது இருவருமே திருமணமானவர்கள். ஆனால் ஜெமினி கணேசன் கடைசிவரை புஷ்பவள்ளியை திருமணம் செய்யவில்லை.

Advertisment
Advertisements

Gemini Ganesha

தன் வாழ்நாள் முழுவதும் ஜெமினி கணேசனின் காதலியாகவே வாழ்ந்த புஷ்பவள்ளிக்கு, ரேகா மற்றும் ராதா என இரண்டு மகள்கள் பிறந்தனர். மூத்த மகளான ரேகா புகழ்பெற்ற பாலிவுட் நடிகையானார். இளைய மகளான ராதா திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். புஷ்பவள்ளி 1991-ம் ஆண்டு மரணமடைந்தார். அவர் பல படங்களில் துணை கேரக்டர்களில் நடித்தாலும், ரேகா இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திரமானார். தனது 12-வது வயதில் 'ரங்குல ரத்னம்' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான ரேகா புஷ்பவள்ளியைப் போலவே ரதிரையுலகில் சாதிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

Rekha

தொடர்ந்து, 15-வது வயதில் 'அஞ்சனா சஃபர்' என்ற தனது முதல் பாலிவுட் படத்தில் ரேகா நடித்தார். இந்தப் படம் பின்னர் 'தோ ஷிகாரி' எனப் பெயர் மாற்றப்பட்டது. புஷ்பவள்ளியின் வாழ்க்கையைப் போலவே, ரேகாவின் வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வாலைத் திருமணம் செய்த ரேகா, ஒரு வருடத்தில் கணவரை இழந்தார். இருப்பினும், அவர் பாலிவுட்டில் ஒரு பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார். தென்னிந்தியத் திரையுலகிலும் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: