வறுமையால் பறிபோன வாய்ப்பு… பசி கொடுமை… மளிகை கடை வேலை… 40-வயதில் கிடைத்த வாழ்க்கை – இமான் அண்ணாச்சி லைப்

Tamil News Update : சின்னததிரையில் தேவயானியின் கோலங்கள், கஸ்தூரி, உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர், சன்டிவியின் குட்டி சுட்டீஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான பலராலும் அறியப்பட்டவர் இமான் அண்ணாச்சி. கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சென்னை காதல் மற்றும் தலைநகரம் படத்தில் ஒரு சில காட்களில் நடித்திருந்த இவர், அதன்பிறகு சூர்யாவின் வேல் படத்தில் கரடிமுத்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து வேட்டைக்காரன், அங்காடித்தெரு, கோ, நீர்பறவை, ஜில்ல, கோலி சோடா, நிமிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சின்னததிரையில் தேவயானியின் கோலங்கள், கஸ்தூரி, உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர், சன்டிவியின் குட்டி சுட்டீஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் மத்தியில் பிரபலமான இவருக்கு பல குழந்தை ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு தற்போது பிரபலமான நடிகரான வலம்வரும் இமான் அண்ணாச்சி சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த புதிதில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர், சினிமா மீதுள்ள மோகத்தினால், சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார். எதுவுமே எளிதாக கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாது என்பதாலோ என்னவோ அண்ணாச்சி சென்னை இடமெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பிறகு சினிமா வாய்ப்பு அவ்வளவு எளிதல்ல என்று புரி்ந்துகொண்ட இவர், தனது பசியை போக்கிக்கொள்ள ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கிருந்துகொண்டே வாய்ப்பு தேடி அலைந்துகொண்டே இருந்துள்ளார்.  

இந்த மளிகை கடை வேலையில் கிடைக்கு் சம்பளத்தை தனது குடும்பத்தினருக்கும் அனுப்பிவைத்துள்ளார். தங்குவதற்கு இடம் இல்லாத இவர் பகலில் மளிகை கடையிலும், இரவில் சென்னை பனகல் பார்க்கில் படுத்து உறங்கியுள்ளார். ஆனாலும் தனது சினிமா ஆசையை விட்டுவிடாத அவர் நேரம் கிடைக்கும்போதேல்லாம் சினிமா வாய்ப்பு தேடி பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். இப்படியே 18 ஆண்டுகள் கடந்த நிலையில் கடைசியாக மக்கள் தொலைககாட்சியில், கொஞ்சம்அரட்டை, கொஞ்சம் சேட்டை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அதன்பிறகு கலக்கப்போவது யாரு சீசன் 1ல் பங்கேற்கும் வாய்பை தனது வறுமை காரணமாக நழுவவிட்ட இமான் அண்ணாச்சி தனது 40-வது வயதில், சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சியின மூலம் வாழ்க்கையையே மாற்றிக்கொண்டார். அதைத்தொடர்ந்து சுட்டி குட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து மரியான் படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து நடித்தார்.

இளகிய மனம் கொண்ட இமான் அண்ணாச்சி கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், பலருக்கு சாப்பாடு வழங்கியும் தனது சமூக பணிகளை தொடங்கினார். தற்போது விஜய் டிவியின் ஹிட் ஷோவான பிக்பாஸ்நிகழ்ச்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 5-ல் பங்கேற்று போட்டியாளர்கள் மட்டுமல்லாது தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே நான் எதை பற்றியும் கவலைப்படவில்லை. எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயும் நான் எல்லோரையும் சிரிக்க வைப்பேன்” என்று கூறிவிட்டு சென்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actor imman annachi life story update in tamil

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com