Advertisment

சொகுசு கார் சாலை தடுப்பில் மோதி விபத்து: நடிகர் ஜீவா, அவரது மனைவி காயம்!

தமிழ் சினிமா நடிகர் ஜீவா தனது மனைவியுடன் காரில் சென்றபோது அந்த கார் விபத்துக்குள்ளானது.

author-image
WebDesk
New Update
actor jeeva car accident

தமிழ் சினிமாவின் இளம் நடிகராக வலம் வரும் ஜீவா, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, கனியாமூர் என்ற பகுதியில் குடும்பத்துடன் காரில் வரும்போது விபத்தை சந்தித்துள்ளார்.

Advertisment

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனர் ஆர்.பி.சௌத்திரியின் இளைய மகன் ஜீவா. தமிழ் சினிமாவில் ஒரு சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது தெலுங்கில் கண்ணப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் இன்று (செப்டம்பர் 11) தனது மனைவி சுப்ரியாவுடன் கள்ளக்குறிச்சி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தபோது, சின்னசேலம் அருகே கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனம், குறுக்கே வந்ததால், நிலை தடுமாறிய சொகுசு கார், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் மோதியது. இந்த விபத்தில் சொகுசு காரின் பம்பர் சேதமடைந்தது. விபத்தில் சிக்கிய ஜீவா மற்றும் சுப்ரியாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் பலத்த சேதமடைந்த காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து ஜீவா ஒரு புதிய காரை ஏற்பாடு செய்து தனது மனைவி சுர்பியாவுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினார். விபத்து ஏற்பட்டதால், காரைச் சுற்றி ஒரு கூட்டம் திரண்டதால் ஜீவா சற்று பதற்றமடைந்தார். சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேட்ட பத்திரிகையாளரிடம் கோபமடைந்த ஜீவா சர்ச்சையில் சிக்கினார்.

நடிகர் ஜீவா கடைசியாக தெலுங்கு திரைப்படமான யாத்ரா 2 இல் நடித்தார், இது ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவானது. அடுத்ததாக தமிழ் படமான மேதாவி மற்றும் தெலுங்கு படமான கண்ணப்பா ஆகிய படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment