New Update
/
நடிகர் ஜெய் தான் திருமணம் செய்துகொண்டது போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அவருடன் இருப்பது பிரபல நடிகை என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் ஜெய். தொடர்ந்து சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான இவர், அடுத்து, சுப்பிரமணியபுரம், வாமனன், கோவா, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகராக இவர், கடந்த ஆண்டு 3 படங்களில் நடித்திருந்தார்.
தற்போது கருப்பர் நகரம் என்ற படத்தில் நடித்து வரும் ஜெய், ட்ரிபிள்ஸ், லேபிள் உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் வீரபாண்டியபுரம் பட்டாம் பூச்சி உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள ஜெய், தற்போது தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பிரக்யா நக்ராவுடன இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கடவுளின் ஆசிவுடன் புதிய வாழ்க்கை ஆரம்பம் என்று ஜெய் வெளியிட்டுள்ள பதிவில், ஜெய் இரண்டு பாஸ்போர்ட்களை கையில் வைத்துள்ளார். இதன் மூலம் அவர்கள் ஹனிமூனுக்காக வெளிநாடு செல்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. வரலாறு முக்கியம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்த நடிகை பிரக்யா, நக்ரா அடுத்து என்.4 என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே ஜெய் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் பின்புறம் கேமரா இருப்பதால் இது படப்பிடிப்புக்கான புகைப்படம் என்று கூறி வருகின்றனர். சமீபத்தில் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் திருமண புகைப்படம் வெளியாகி இருந்த நிலையில், மறுநாள் இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது. அதேபோல் இது குறித்து உண்மை என்ன என்று நாளை தெரியவரும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.