துல்கர் சல்மானை தொடர்ந்து ஜெயம் ரவி... தக் லைஃப் படத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் நடிகர்கள்?

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Dulquer And Jayam ravi
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவியும் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

1987-ம் ஆண்டு கமல்ஹாசன் சரண்யா நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நாயகன். மணிரத்னம் இயக்கிய இந்த படம் தமிழகத்தில் இருந்து மும்பை சென்று பெரிய கேங்ஸ்டராக இருந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாறு படம் என்று கூறப்பட்டது. கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் நாயகன் படம் முக்கிய படமாக அமைந்துள்ளது.

நாயகன் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தாலும், அதன்பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இருவரும் இணைந்து எந்த படத்தையும் தொடங்கவில்லை. தற்போது 36 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். தக் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஜெயம்ரவி துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து படக்குழு அதிகாப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடாத நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவியும் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

ஜெயம் ரவி தனது பிஸியான ஷெட்யூல் மற்றும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தக் லைஃப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படும் நிலையில், சில வர்த்தக ஆய்வாளர்களும் தங்கள் எக்ஸ் வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. பரபரப்பான ஷெட்யூல் காரணமாக ஏற்கனவே துல்கர் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்திலிருந்து விலகிய நிலையில், கமல்ஹாசன் நடிக்கும் இந்த படததின் அடுத்தகட்ட அறிவிப்புகளை சமூக ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kamalhaasan Jayam Ravi Dulquer Salmaan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: