Advertisment

மனைவியின் சந்தேகம்... மாமியாரின் நஷ்ட கணக்கு: ஜெயம் ரவி விவாகரத்துக்கு காரணம் இதுதானா?

சமீபத்தில் தனது மனைவியை விவாரத்து செய்வதாக அறிவித்த ஜெயம் ரவி, இதற்கான காரணம் குறித்து பிரபல யூடியூபர் ஒருவரிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Jayam Ravi Aarti photo

சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாரகத்து செய்வதாக அறிவித்த ஜெயம் ரவியின் முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு இருவரும் மாறி மாறி குறை கூறி சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஜெயம் ரவி கூறியதாக ஆர்.ஜே.ஷா கூறியுள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஜோடி ஜெயம்ரவி ஆர்த்தி. ஜெயம்ரவி நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது குடும்பத்துடன், புகைப்படங்கள் வெளியிடுவது, வெளியில் செல்வது என குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி வந்தது அவரின் சமூகவலைதள பதிவுகளின் மூலம் தெரியவந்தது. மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த ஜெயம்ரவி, அதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். அதேபோல், ஜெயம் ரவி ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. அவரை என்னால் சந்திக்கவும் முடியவில்லை. குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று அவரது மனைவி ஆர்த்தி கூறியிருந்தார்.

இதனிடையே ஜெயம் ரவி நேற்று தனது மனைவி ஆர்த்தி மீது காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படி இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக்கொண்டே இருக்கும் நிலையில், பிரபல யூடியூபர் ஆர்.ஜே.ஷா ஜெயம் ரவி தன்னை அழைத்து பேசி தனது தரப்பு நியாயத்தை கூறியதாக சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நாம் பிரிந்துவிடலாம் என்று ஆர்த்திக்கு இருமுறை நோட்டீஸ் அனுப்பினேன். அவரும் கையெழுத்து போட்டு அதை வாங்கிக்கொண்டார். அதன்பிறகுததான் நான் என் முடிவை சமூகவலைதளத்தில் பதிவிட்டேன். அதன்பிறகு எனக்கு விவாகரத்தே தெரியாது. என் குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டார் ஜெயம்ரவி என்று கூறியிருந்தார். இதை பார்த்து மக்கள் அனைவரும் ஜெயம்ரவி ஏன் இப்படி இருக்கிறார் என்று கேட்க தொடங்கிவிட்டார்கள்.

உண்மையாக என்ன நடந்தது என்றால், செப்டம்பர் 9-ந் தேதி நான் விவாகரத்து அறிவிப்பை வெளிவிடுவதற்கு முன், குழந்தைகள் என் வீட்டில் தான் இருந்தார்கள். நான் எனது மூத்த மகனிடம் சொன்னேன். நானும் அம்மாவும் சேர்ந்து இருந்தால், பிரச்சனை அதிகமாகும். அதனால் பிரிந்துவிடலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு என் மகன், உங்கள் சந்தோஷம் தான் முக்கியம் அப்பா. ஆனால் நீங்கள் இருவரும் சேர்ந்து இருந்தால் எங்களுக்கு சந்தோஷம் என்று சொன்னான்.

அதன்பிறகு எல்லாம் கொஞ்ச நாளில் சரியாக போய்விடும். நான் உங்களை பார்க்காமல் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு தான் நான் பதிவிட்டேன். ஜூன் மாதம் ஒரு மகனின் பிறந்த நாள். அப்போது நான் ஆர்த்தி என குடும்பத்தினர் அனைவரும் கொணடாடினோம். ஆகஸ்ட் மாதம் ஒரு மகனுக்கு பிறந்த நாள். நான் ஐ.டி.சி.யில் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஆனால் நான் காத்திருக்கிறேன் என்று தெரிந்தும் இவர்கள் வராமல் இலங்கை சென்று வந்ததார்கள்.

கடைசி 13 வருடங்களாக எனக்கு தனி பேங்க் அக்கவுண்ட் கிடையாது. ஆர்த்தியுடன் ஜாயின் அக்கவுண்ட்தான். அதனால் நான் என்ன செலவு செய்தாலும் அவர்களுக்கு தெரிந்துவிடும். அவர் பெயரில் 4 -5 அக்கவுண்ட் இருக்கும். அது அவர்கள் தனி அக்கவுண்ட். நான் பயன்படுத்தும் அக்கவுண்ட் ஜாயின் அக்கவுண்ட் தான் செலவு செய்தால் மெசேஜ் அவருக்குதான் போகும். அது ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் செலிபிரிட்டி. ஒரு பிரைவசிக்காகத்தான் என்று சொன்னார்.

ஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்கிறேன். கார்டு வைத்து ஸ்வைப் செய்தால் மெசேஜ் போகும். உடனே என்ன சாப்பிடுறீங்க எங்க இருக்கிகீங்க என்று கேட்பார். என்னிடம் கேட்டாலும் பரவாயில்லை. என் உதவியாளர்களிம் கேட்பார். ஊட்டியில் பிரதர் படத்தின் ஷூட்டிங் நடக்கும்போது, ரூமில் தனியா இருக்கீங்களா, கூட யார் இருக்க, வீடியோ கால் பண்ணுங்க என்று சொன்னார். இதனால் பிரச்சனை வந்து அந்த ஷூட்டில் இருந்து நான் வெளியில் வர வேண்டிய நிலை வந்தது.

இப்படி பல நெருக்கடிகள் வந்தபோது நான் பொறுமையாக இருந்தேன். ஆர்த்தி அம்மாவுக்காக 3 படங்கள் நடிக்க முடிவு செய்து முதல் படம் நடித்தேன். அந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. 2-வது பூமி படம் நடித்தேன் அந்த படம் ஒடிடி தளத்தில் வெளியானது. அதுவும் என்னை பொருத்தவரை வெற்றிதான். அடுத்து 3-வது படம் நடித்தபோது, இந்த சேனல்க்கு ஏன் ப்ரமோஷன் போகவில்லை. அங்கே ஏன் போகவில்லை என்று கேட்டார்கள். இந்த 3 படங்களும் நஷ்டம் என்று சொன்னார்கள்.

அதன்பிறகு தயாரிப்பில் ஒருவரை அழைத்து கணக்கு பார்க்கும்போது 3 படங்களுமே லாபத்தை கொடுத்துள்ளது  ஆனால் ஏன் இப்படி நஷ்ட கணக்கு காட்டுக்கிறார் என்று நான் கோபப்பட்டேன். எல்லாம் உங்க பேர்லதான் இருக்கு. நான் சம்பாதித்த காசில் வாங்கின வீடு நம்ம ரெண்டுபேர் பேர்லதான் இருக்கு. ஆபீஸ் அதே போலத்தான். 6 காரில் 4 உங்க பேரில் இருக்கு 4 என் பெயரில் இருக்கு. அதை தாண்டி வாங்கிய அனைத்தும் அவர் பெயரில் தான் இருக்கு.

அப்படி இருக்கும்போது ஏன் நஷ்ட கணக்கு காட்ட வேண்டும் என்று யோசித்து என் நண்பர் வீட்டுக்கு போன தொடங்கினேன். அப்போது என் நண்பர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 2 வருடத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட மரியாதை என்பது துளிகூட இல்லை. அவர்கள் வீட்டில் இருந்தவர்களுக்கு கிடைத்த மரியாதை கூட எனக்கு கிடைக்கவில்லை. இதனால் தான் இனிமேல் இந்த உறவு வேண்டாம் என்று முடிவு செய்தேன் என்று ஜெயம் ரவி கூறியதாக ஷா கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment