சினிமாவில் எப்போதும் ஆண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது நடிகர் விஜய் தன்னுடன் நடித்த இரண்டு நாயகிகளை குதிரை என்று கூறியதாக நடிகர் ஷாம் கூறிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், நடிகர் ஷாம் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் வாரிசு படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஷாம், தனது முதல் படமாக 12பி பார்த்த விஜய் முதல் படத்திலேயே இரண்டு குதிரைகளுடன் நடித்திருக்கிறாய் என்று கூறியதாக தெரிவித்திருந்தார். 12பி படத்தில் சிம்ரன் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். இது நடிகர் ஷாமின் முதல் படம்.
ஷாம் கூறிய இந்த தகவல் இணையத்தில் படு வைரலாக பரவி வரும் நிலையில், நடிகர் விஜய் தன்னுடன் நடித்த நடிகைகளை குதிரை என்று சொல்வதா என்று பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே விஜயின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக காற்றின் மொழி படத்தின் பிரஸ்மீட்டில் நடிகை ஜோதிகா பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஜோதிகா நடிப்பில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வெளியான காற்றின் மொழி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய ஜோதிகா, ஹீரோஸ் கூட அதிகமா வொர்க் பண்றது கம்ஃபடபுளா இருக்காது. என்னோட சினிமா வாழ்கையில் சூர்யா, அஜித், மாதவன் ஆகியோருடன் வொர்க் பண்ணும்போது கம்ஃபடபுளா உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த பட்டியலில் ரஜினி, கமல் மற்றும் விஜய் அவர் குறிப்பிடவில்லை. கமலுடன் தெனாலி, வேட்டையாடு விளையாடு, விஜயுடன் குஷி திருமலை ஆகிய படங்களில் ஜோதிகா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil