பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் கல்யாண் மாஸ்டர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரை வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
1992-ம் ஆண்டு விஜயகாந்த் – சரத்குமார் இணைந்து நடித்த தாய்மொழி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடியவர் கல்யாண். அதன்பிறகு பாட்சா படத்தில் ரஜினிகாந்துடன் நடனமாடிய இவர், 7ஜி ரெய்போ காலணி, எம்.குமரன், சென்னை 28, ஆறு உள்ளிட்ட பல படங்களில் நடனமாடியுள்ளார். மேலும், உயிரோடு உயிராக, தொடங்கி தீனா, தீனா கில்லி, பிரியாணி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரஷாந்துடன் கல்லூரி வாசல் படத்தில் நடிகராக அறிமுகமாக கல்யாண் மாஸ்டர், விஜய் நடிப்பில் வெளியான மான்புமிகு மாணவன் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். சமீபத்தில் வெளியான கடைசி உலகப்போர் படத்தில் கம்ஷ்னர் கேரக்டரில் நடித்திருந்தார். இதனிடையெ கல்யாண் மாஸ்டர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் படம் குறித்து பேசியுள்ள அவர், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மையையும் உடைத்துள்ளார்.
குட் பேட் அக்லி படம் அஜித்தின் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தக்கூடிய ஒரு படமாக இருக்கும். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எனர்ஜியை கொடுக்கும். மேலும் அந்த எனர்ஜியோடு அஜித்தின் நடனமும் இருக்கும். இந்தப் படம் முழுக்க முழுக்க மாஸாக இருக்கும். வசூலிலும் சக்கைப்போடு போடும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய கல்யாண் மாஸ்டர் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பெயரிலேயே கல்யாணத்தை வைத்துக்கொண்டு இன்னும் உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“