Advertisment

உங்க இன்ஸ்பிரேஷன் யார்? கமல்ஹாசன் கேள்விக்கு சிவாஜி கொடுத்த பதில்

தனது சமகால நடிகர்கள் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் சிவாஜி கணேசன்

author-image
WebDesk
New Update
உங்க இன்ஸ்பிரேஷன் யார்? கமல்ஹாசன் கேள்விக்கு சிவாஜி கொடுத்த பதில்

இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர்களின் பட்டியலில் சிவாஜி கணேசனுக்கு முக்கிய இடம் உண்டு. 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படம் தொடங்கி, 1999-ம் ஆண்டு வெளியான பூப்பறிக்க வருகிறோம் என்ற தனது கடைசி படம் வரை ஒவ்வொரு படத்திற்கு தனது வித்தியாசமாக நடிப்பின் மூலம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நடிகர்களையும் கவர்ந்தவர்தான் சிவாஜி கணேசன்.

Advertisment

தனது சமகால நடிகர்கள் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சிவாஜி கணேசன், கமல்ஹாசனுடன் தேவர் மகன், ரஜிகாந்துடன், விடுதலை, படிக்காதவன், படையப்பா, உள்ளிட்ட தற்போதைய முன்னணி நடிகளுக்கு இணையாக நடித்து தான் நடிகர் திலகம் என்பதை பலமுறை நிரூபித்தவர்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ள சிவாஜி கணேசன் இந்திய அரசின் பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ள சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு மரணமடைந்தார்.

தற்போது அவர் இல்லாவிட்டாலும் திரைத்துரையில் அவரைப்பற்றி பேசாத நடிகர்கள் இல்லை. தற்போதும் டிவியில் அவர் படங்கள் ஒளிபரப்பாகும்போது அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டங்களும் இல்லாமல் இல்லை. மேலும் தனது நடிப்பில் பல பரிமாணங்களை காட்டிய சிவாஜி கணேசன் இன்றைய இளம் தலைமுறை நடிகளுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசன் சிவாஜி கணேசனுடன் பேசும் வீடியோ பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு அறையில் சிவாஜி கணேசன் அமர்ந்திருக்கிறார். அப்போது அந்த அறைக்கு வரும் கமல்ஹாசனை வா ராஜா வா வா என்று வரவேற்க்க அவரும் சிவாஜியின் காலில் விழுந்து வணங்கி விட்டு அமருகிறார். அப்போது சிவாஜி இந்த நேரத்தில் என்ன இவ்வளவு தூரம் என்று கமல்ஹாசனிடம் கேட்க சும்மா பர்மிஷன் இல்லாம வந்துட்டேன். இந்த வழியா போய்ட்டு இருந்தேன் வாசல்ல பிள்ளையார் கோவில் தெரிஞ்சிது. சின்ன பிள்ளையார் பாத்துட்டேன் பெரிய பிள்ளையாரை பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று கமல் சொல்ல அதை கேட்டு சிவாஜி சிரிக்கிறார்.

அதன்பிறகு மாடியில் ஒரு சின்ன பிள்ளை படிக்கிற மாதிரி ஒரு பொம்மை வச்சிருக்கீங்க அதை பார்க்கும்போது களத்தூர் கண்ணம்மா படத்தில்  நான் உட்கார்ந்து படிப்பது போல் இருக்கு இது என்னோட ஞாபக அர்த்தம்னு நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன். என்று கமல் கேட்க, அதற்கு சிவாஜி யார் வேணும்னாலும் அவது அவர்கள் ஞாபக அர்த்தம் என்று சொல்லலாம். ஏன்னா அந்த பொம்மை பொதுநலம். ஆனா அந்த பொம்மை பார்க்கும்போதெல்லாம் எனக்கு உன் ஞாபகம்தான் வரும் என்று சொல்கிறார்.

அதன்பிறகு கமலின் அப்பா பற்றி பேசும், சிவாஜி உனக்கு ஞாபகம் இருக்கா 6 வயதில் உன்னை தூக்கி வந்து என் மடியில் உட்கார வைத்து பெயர் என்ன என்று கேட்பேன் அதற்கு நீ கமல்ஹாசன் என்று சொல்வாய். இப்போவும் நீ அப்படித்தான் பேசுகிறாய் என்று கூறுகிறார். அதன்பிறகு பேசும் கமல் 1954-க்கு அப்புறம் வந்த தமிழக நடிகர்களுக்கு எல்லாருக்கும் உங்க பாதிப்பு இருக்கும். 54-க்கு அப்புறம நீங்க பலருக்கும் இன்ஸ்பிரேஷன். ஆனால் உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் என்று கேட்கிறார்.  

இதற்கு பதில் பேசும் சிவாஜி கணேசன், நான் சின்ன வயதில் இருந்து ஆங்கில படம் பார்ப்பது உண்டு. ருடால்ப் வாலண்டினோ ஆக்ட் பண்ண சைலண்ட் மூவில ஷீக்-னு ஒரு படம் ஆக்ட் பண்ணிருப்பாரு. அதுதான் அவரின் டாக்கி பிச்சர். அதில் இருந்து பலரின் படங்களை பார்த்திருக்கிறேன். மற்ற நடிப்பை விட நமது நடிப்பு தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும் என்று சின்ன வயசுல இருந்து ட்ரை பண்ணிட்டுவரதுனால அது சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சுதோ என்னவோ என்று சொல்கிறார்.

மேலும் நடிப்பில் வித்தியாசம் என்பது நாமே முயற்சி பண்ணி கற்றுக்கொள்ள வேண்டியது தான். நடிப்புக்கு கல்லூரி வைக்கலாம் சொல்லி கொடுக்கலாம் ஆனால் அதெல்லாம் ஓரளவுக்குதான். ஆனால் நமது அடி வயிற்றில் இருந்து வரும் நடிப்புதான் நிலை நிறுத்தும். இதெலலாம் தானாக வரவேண்டும் சொல்லி கொடுத்து வராது. என்ற கேரக்டர் என்று தெரிந்துகொண்டால் அதற்கு ஏற்றார்போல் ஆக்ட் பண்ணிக்கவேண்டியதுதான்.

சிவாஜி சாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அவருக்கு கொடுக்க வேண்டாம். அவரைப்பற்றி தீசிஸ் சப்மிட் பண்றவங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுங்கள். ஏன்னா இவர் அவ்வோ பண்ணிருக்காரு என்று சொல்ல, கமல் ராஜா நீ என்னை பற்றி இவ்வளவு புகழ்து பேசுற ஒரு கலைஞனுக்கு பணம் காசு முக்கியம் அல்ல புகழ் பாராட்டு தான் முக்கியம். அதையெல்லாம் கேட்டு தான் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்.  கலைஞனின் திறமையை பார்த்து ஒருவன் கண்ணீர் விடுகிறான் என்றால் அந்த ஒரு சொட்டு கண்ணீர் ஒரு கோடிக்கு சமம் என்று கூறியுள்ளார்.

பொதிகை தொலைக்காட்சியில் வெளியான இந்த வீடியோவை ஆல்நியூமீடியா டிஎம் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan Sivaji Ganesan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment