அரசியல் வேண்டாம்... உன்னை கொன்று விடுவார்கள்... கமல்ஹாசனை எச்சரித்த பிரபலம்
சிறுவயதில் நான் உன்னை எவ்வளவோ மட்டம் தட்டியுள்ளேன். உன்னை டிஸ்க்ரேஜ் பண்ணியிருக்கிறேன். அதனால் இன்று உனக்கு கிடைத்திருக்கும் புகழ் நினைத்து நான் கொண்டாட என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை
சிறுவயதில் நான் உன்னை எவ்வளவோ மட்டம் தட்டியுள்ளேன். உன்னை டிஸ்க்ரேஜ் பண்ணியிருக்கிறேன். அதனால் இன்று உனக்கு கிடைத்திருக்கும் புகழ் நினைத்து நான் கொண்டாட என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை
தமிழ் சினிமாவின் உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் மடியில் வளர்ந்தவர் என்று அவருக்கே தெரியாத ஒரு உண்மையை அவரது அக்கா தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கமல்ஹாசன். மேலும் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் இவர், ஹாலிவுட் தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்.
பல வித்தியாசமான படங்களை இயக்கி நடித்து தமிழ் சினிமாவின் உலக நாயகன் என்று பெயரெடுத்துள்ள கமல்ஹாசன் தற்போது நடிப்புடன் சேர்த்து மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.
தொடர்ந்து 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வசூலில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரது அக்கா பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதில் பேசும் இவர், நீ கருணாநிதி, எம்ஜிஆர், காமராஜர் உள்ளிட்ட முதல்வர்களுடன் பழக்கம் இருந்ததாகவும், அறிஞர் அண்ணாவுடன் மட்டும் பழக்கம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனால் நீ வளர்ந்ததே அண்ணாதுரையின் மடியில்தான் என்று கூறியுள்ளார். மேலும் சிறுவயதில் நான் உன்னை எவ்வளவோ மட்டம் தட்டியுள்ளேன். உன்னை டிஸ்க்ரேஜ் பண்ணியிருக்கிறேன். அதனால் இன்று உனக்கு கிடைத்திருக்கும் புகழ் நினைத்து நான் கொண்டாட என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். அதேபோல் நீ இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறாய் நான் உன்னை வரவேற்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
அதன்பிறகு இந்த நிகழ்ச்சியில் நீங்கள் அண்ணாதுரையின் மடியில் வளர்ந்ததாக அக்கா தெரிவித்துள்ளார் என்று கேட்கிறார். அதற்கு கமல்ஹாசன், நான் அவரது மடியில் வளர்ந்தேன் என்பது எனக்கே இப்போதுதான் தெரியும் என்று கூறுகிறார். மேலும் நான் அரசியலுக்கு சென்றால் என்னை கொன்றுவிடுவார்கள் என்று சந்திரஹாசனுக்கு (கமல்ஹாசனின் அண்ணன்) பயம்.
ஆனால் நமது அப்பா செய்ததை நீதான் செய்ய வேண்டும் என்று இவர் சொல்கிறார். ஏனென்றால் நல்ல நல்ல தலைவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து அப்பாவுடன் அளவளாவதை பார்த்திருக்கிறார்கள். கக்கன் உள்ளிட்ட நிறைபேர் வந்திருக்கிறார்கள். அந்த மாதிரி நடக்கும் என்று நம்பிக்கையுள்ள கூட்டத்தில் எனது அக்காவும் ஒருவர் என்று கூறுகிறார் கமல். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“