விருமாணடி படத்தில் நடிகை அபிராமி தென்னிந்திய தமிழ் பேசி நடித்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று நடிகர் கமல்ஹாசன் பேசிய வீடியோ பதிவை பார்த்த நடிகை அபிராமி நேர்காணலில் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
1995-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாக கதை புஸ்தகம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அபிராமி. தொடர்ந்து சில வெற்றிப்படங்களை கொடுத்த அவர், 2001-ம் ஆண்டு தமிழில் வெளியான அர்ஜூனின் வானவில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே சிறப்பாக நடித்த அபிராமி தனக்கென ரசிகர்களை வட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
தொடர்ந்து, மிடில் க்ளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், சமஸ்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அபிராமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்திருந்தார். பூர்வீகம் கேரளா மாநிலமாக இருந்தாலும், இந்த படத்தில் மதுரை தமிழை சரியாக பேசி பலரின் பாராட்டுக்களை பெற்றவர் அபிராமி.
அதேபோல் கமல்ஹாசனின் தீவிர ரசிகையான திவ்யா கோபிகுமார் தனது பெயரை அபிராமி என்று மாற்றிக்கொண்டுள்ளார். விருமாண்டி படத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகிய அபிராமி, 11 வருட இடைவெளிக்கு பிறகு ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அபிராமி தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஆர் யூ ஓகே பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அபிராமியிடம் விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியின் நடிப்பு மற்றும் மதுரை தமிழ் குறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ பதிவு காண்பிக்கப்பட்டது.
இதில் அபிராமி விருமாண்டி படத்தில் நன்றாக நடித்திருந்தார். அவர் வேற்று மொழி தெரிந்தவர். அவர் தெக்கித்தி மொழி எப்படி பின்னி எடுக்கிறார் பாருங்க. சின்ன சின்ன விஷயங்களை கூட அவ்வளவு அழகாக பேசியிருப்பார். நான் எல்லா ஹீரோயின்களுக்கும் டப்பிங் அவங்களைத்தான் கூப்பிடுவேன். விஸ்வரூபம் படத்திலும் அவரை வைத்துதான் டப்பிங் செய்தேன். அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் போல் பேச வேண்டும். அதனால் தான் அவரை வைத்து பேச வைத்தேன். எல்லாற்றையும் புரிந்து பேசுவார்.
இவர் சிறந்த நடிகை. இன்டஸ்ரி விட்டு போயிருக்க கூடாது. இருந்தாலும் இப்போ நல்லதான் இருக்காங்க. ஒரு 10 பாட்டுக்கு காஷ்மீர்ல டான்ஸ் ஆடுறதைவிட இந்த முள்ளுகாட்டில் நடந்து வரும் ஒரு ரொமான்ஸ்க்கு காட்சிக்கு ஈடாகாது என்று கூறியிருந்தார்.
இதை பார்த்த அபிராமி சற்று கண்கலங்கிவிட்டார். இன்டஸ்ரியில் எல்லாருக்கும் நான் கமல் சார் ஃபேன் என்று தெரியும். விருமாண்டி படத்தின் போது எதற்காக என்னை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன். அவ்வளவு தீவிரமான .ஃபேன் நான். அவர் சொன்னது போல் நான் திரைத்துறையை விட்டு போயிருக்க கூடாது. ஆனால் மீண்டும் என்னை திரைத்துறைக்கு அழைத்து வந்தது அவர்தான்.
நான் நியூயார்கில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். நீ வா வந்து டப் பண்ணு என்று சொல்லி அழைத்தார். என்னிட்ம் ஏதொ இருக்கு என்று நினைத்ததால் என்னை அழைத்திருக்கிறார். ஆனால் கமல் சார் வேறு யாரையாவது இப்படி சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் என்னை பற்றி இப்படி சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“