Tamil Cinema Actor Kamal Viral Video : தமிழ் சினிமாவில் உலக தொழில்நுட்பங்களை புகுத்திய பெருமைக்குரியவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு நடன இயக்குநர் நடிகர் திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த கமல்ஹாசன் உலகநாயகன் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வருகிறார்.
சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் கால் பதித்துள்ள கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியி்டார். நடிப்பில் பல பரிமானங்களை காட்டும் கமல்ஹாசன் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில், அறிமுகமானார். தற்போது இந்நிழ்ச்சி 5-வது சீசனை எட்டியுள்ளது.
மேலும் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்ரம் படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனும் அவரின் அஸ்தான இயக்கநருமான கே.எஸ்.ரவிக்குமாரும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில், கே.எஸ் ரவிக்குமார் பேசுகையில்,நான் அவ்வை சண்முகி படத்தில் வேலை செய்யும்போது அதற்கு முன்பே முத்து படத்தை இயக்கி இருந்தேன். அப்போதில் இருந்து நாள் சிகரெட் பிடிக்க தொடங்கினேன். அவ்வை சண்முகி ஷூட்டிங் நேரத்தில் அங்கு வந்திருந்த என் நண்பர்கள், என்னை தனியாக அழைத்து கமல் சார் படத்தை எந்தெந்த தியேட்டதில் எல்லாம் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால் அவருடைய பட ஷூட்டிங்கில் நீ இப்படி செய்வது சரியில்லை என்று சொல்ல ஒரு நண்பன் என்னை அடிக்கவே வந்துவிட்டான்
அன்றில் இருந்து நாள் இந்த சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டேன் இதற்கு முழுமுதல் காரணம் கமல்சார் தான் என்று கூறியிருந்தார். அவர் முடிக்கும் முன்பே பேச தொடங்கிய கமல்ஹாசன், நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். மீசையும் சிகரெட்டும் ஒன்றாக வளரும் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரம் அது அப்போது நான் சிகரெட் பிடிப்பதை பார்த்த ஒரு லைட்மேன் சிகரெட்டை பிடுங்கி அடி திருப்பி விடுவேன் இப்பதான் உன்னை அம்மாவும் நியே அப்பாவும் நியே என்று பார்த்த மாதிரி இருக்கு இந்த வயதில் உனக்கு சிகரெட் பழக்கமா என்று திட்டினார்.
அதன்பிறகு சினிமாவில் எல்லார் முன்னிலயிலும் வளர்ந்ததால், மறைந்து மறைந்து சிகரெட் பிடிக்க முடியவில்ல. சுதந்திரமாக சிகரெட் பிடிக்கும் ஒரே இடம் கழிவறைதான். ஆனால் கழிவறை சென்று சிகரெட் பிடிக்க வேண்டுமா என்று யோசித்து அந்த பழக்கத்தையே விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். இவர்கள் இந்த பேச்சு தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil