தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின், மாமா சீனிவாசன் வயது மூப்பு காரணமாக 92 வயதில் கொடைக்கானலில் மரணமடைந்தார்.
மக்களவை தேர்தலில், இந்தியா கூட்டணிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசனின் மாமா சீனிவாசன் என்பவர் வயது மூப்பு காரணமாக கொடைக்கானலில் மரணமடைந்தார்.
அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அறிந்து உடனடியாக அங்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் கமல்ஹாசனுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அதேபோல் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன், கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ஆகியோரும் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கூடி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சினேகன், அவரின் மனைவி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் பலரும் இறந்த சீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் இருவரும் இறந்த தாத்தாவின் உடலை பார்த்த கதறி அழுத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து கமல்ஹாசன் எனது எக்ஸ் பக்கத்தில்,
எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தவர், புரட்சிகரமான சிந்தனைகளும், துணிச்சலான செயல்களும் உடையவர். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு நாளை காலை பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் கருத்து பகுதியில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“