கல்லூரியில் படித்த காதலி; காரில் சென்று சந்தித்த கமல்ஹாசன்: தயாரிப்பாளர் உடைத்த உண்மை!

1978-ம் ஆண்டு க்ளாசிக்கல் டான்சர் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 10 ஆண்டுகள் நீடித்த நிலையில், 1988-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

1978-ம் ஆண்டு க்ளாசிக்கல் டான்சர் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 10 ஆண்டுகள் நீடித்த நிலையில், 1988-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

author-image
WebDesk
New Update
Kamal haasan News

பெண் ரசிகைகளை அதிகம் கொண்ட நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், தனது முதல் மனைவி வாணி கணபதி, கல்லூரியில் படிக்கும்போது அவரை சந்திக்க காரில் வருவார் என்று தயாரிப்பாளர் முக்தா ரவி கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் பல புதுமையாக டெக்னாலஜிகளை அறிமுகம் செய்தவர் கமல்ஹாசன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ஜெமினி கணேசன், சாவித்ரி நடிப்பில் வெளியான களத்தூர் கண்ணம்மா படம் தான் கமல்ஹாசன் திரைத்துறையில் அறிமுகமான முதல் படம்.

அதன்பிறகு குழந்தை நட்சத்திரமாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த கமல்ஹாசன், வளர்ந்தபின், பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். பல திரைப்படங்களில் சிறுவிறு கேரக்டரில் நடித்திருந்த இவர், 1974-ம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான கன்னியாகுமரி திரைப்படம் தான் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம். அடுத்து விஷ்ணு விஜயம் என்ற படத்தில் நடித்திருந்த கமல், தமிழிலும் பல படங்களில் 2-வது நாயகனாக நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் 1973-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழில் அரங்கேற்றம் படத்தில் நடித்த கமல்ஹாசன், அதன்பிறகு தமிழிலும் நாயகனாக நடிக்க தொடங்கினார். அதன்பிறகு அவர் சினிமாவில் தொடாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளார். சினிமாவில் பல துறைகளில் முத்திரை பதித்துள்ள கமல்ஹாசன் தனிப்பட்ட வாழ்க்கயைில் 2 திருமணங்கள் செய்துள்ளார். 1978-ம் ஆண்டு க்ளாசிக்கல் டான்சர் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார்.

Advertisment
Advertisements

இவர்களின் திருமண வாழ்க்கை 10 ஆண்டுகள் நீடித்த நிலையில், 1988-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். சமீபத்தில் இவர்களின் காதல் வாழ்க்கை குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் முக்தா ரவி, கமல்ஹாசனுக்கு பெண் ரசிகைகள் அதிகம். படப்பிடிப்பு தளத்தில், அவரின் நகைச்சுவை மற்றும் இயல்பான பேச்சால் பல நடிகைகள் அவர் மீது காதல் வயப்பட்டனர். இந்த நேரத்தில் ஸ்ரீவித்யாவுடன் காதல் என்று சொல்கிறார்கள். அதை பற்றி எனக்கு தெரியாது.

அதே சயம் வாணி கணபதியை எனக்கு தெரியும். நான் விவேகானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், கல்லூரி முடிந்து வெளியே வரும்போது, ஃபியட் கார் பாலாஜி அவென்யூ அருகில் ஒரு இடத்தில் நிற்கும். அங்கு கமலஹாசன், வாணிகணபதியைப் பார்க்க வருவார். அவரது வீட்டுக்கு 2 வீடு தள்ளி எனது நண்பர் சுந்தர் ஹரிகரன்,  உறவினர்கள் அங்கு குடியிருந்தனர். நாங்கள் இந்த டைமில் கமல்ஹாசனை இப்போது எதிர்பார்க்கலாம் என்று பேசிக்கொண்டிருப்போம். அந்த நேரத்தில் அவர் காரில் வருவார்.

அப்போது அவர் வாணி கணபதியுடன் காதலில் இருந்தார். என்னை தெரியும் என்பதால் என்னை பார்த்தவுடன் சிரிப்பார். பொதுவாக அனைத்து நடிகர்கள் பற்றியும் கிசு கிசு வருவது சகஜம் தான். அமிதப் பச்சனுக்கே கிசுகிசு வந்திருக்கிறது. இவருக்கு க்ளாமர், அழகு இருந்ததால் சற்று கிசு கிசு அதிகமாக இருந்தது என்று முக்தா ரவி கூறியுள்ளார். 

Kamalhaasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: