தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் நடிகராக வளர்வதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய்சங்கர்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
Advertisment
1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் ஜெமினிகணேசனின் மகனாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்ட சில நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின்ன வாலிப வயதில் தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத கமல்ஹாசன், கேரக்டர் நடிகராக சில படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளி்ட்ட மொழிகளிலும் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் நடிப்பிற்கான வாய்ப்பு குறைந்ததால் டெக்னீஷியனதாக தனது திரைபயணத்தை தொடங்கினார். அதன்பிறகு 1973-ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக அரங்கேற்றம் படம் கமல்ஹாசனுக்கு மறுவாழ்வு கொடுத்தது என்று சொல்லலாம்.
அரங்கேற்றம் படத்திற்கு பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்த கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து மற்ற இயக்குனர்களிடம் இருந்தும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அப்படிப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட கமல்ஹாசன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஆனால் கமல்ஹாசன் இந்த அளவிற்கு வருவதற்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகர் ஜெய்சங்கர்தான் என்பது தெரியவந்துள்ளது. வாலிப பருவத்தில் சரியாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த கமல்ஹாசன் ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்துள்ளார். அதன்பிறகு டான்ஸ் கம்போசிங் என கமலின் வாழக்கை நகர்ந்துகொண்டிருக்க ஒருமுறை ஜெய்சங்கர் படத்திற்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு கமலுக்கு கிடைத்துள்ளது.
அப்போது படப்பிடிப்பில் கமல்ஹாசனை பார்த்த ஜெய்சங்கர், நீ எவ்வளவு நாள் திரைக்கு பின்னால் இருக்க போகிறாய் இப்படியே உன் லைஃப் போய்டுமா? நீ நடிக்க வா என்று கூறியுள்ளார். சொல்லியதொடு மட்டுமல்லாமல் கமல்ஹாசன் ஆடிய டான்ஸ் வீடியோவை தனது படத்தில் சேர்க்குமாறு கூறியுள்ளார்.
அதன்பிறகு பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ள கமல்ஹாசனுக்கு பல படங்களில் ஜெய்சங்கர் வில்லனாக நடித்துள்ளார். அதேபோல் தனது ரசிகர் மன்றங்களை நற்பணிமன்றமாக மாற்றியதற்கு முக்கிய காரணம் ஜெயசங்கர்தான் என்று கமல்ஹாசனே கூறியுள்ளார். இந்திய சினிமாவின் ஜெம்ஸ்பாண்ட நடிகர் என்று வர்ணிக்கப்படும் ஜெய்சங்கர் உலகநாயகன் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.