scorecardresearch

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் செட்டில் கமல்ஹாசன்: லைவ் வீடியோவில் பிரியங்கா

கமல்ஹாசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது அனைவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் செட்டில் கமல்ஹாசன்: லைவ் வீடியோவில் பிரியங்கா

விக்ரம் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன். இந்த பணியின் ஒரு பகுதியாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் கமல்ஹாசன்.

மாநகரம். கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில். நரேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  

இந்நிலையில் விக்ரம் படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில். படத்திற்காக ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன். விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார். அவருடன் லைவ் போன வீடியோவையும் விஜய் டிவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், கமல்ஹாசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது அனைவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor kamalhaasan in vijay tv super singer show

Best of Express