மாங்காயில் மண்ணு... கத்தி இல்லாத உறை... கமல்ஹாசன் முதல் படத்தில் இவ்வளவு ஏமாற்றமா?
அரங்கேற்றம் படத்திற்கு பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்த கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற இயக்குனர்களிடம் இருந்தும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
அரங்கேற்றம் படத்திற்கு பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்த கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற இயக்குனர்களிடம் இருந்தும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் திரைத்துறையில் பல சாதனைகளை செய்துள்ள நிலையில், அவர் டிவி பேட்டி ஒன்றில் தனது முதல் பட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Advertisment
1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் ஜெமினிகணேசனின் மகனாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்ட சில நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின்ன வாலிப வயதில் தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத கமல்ஹாசன், கேரக்டர் நடிகராக சில படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளி்ட்ட மொழிகளிலும் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் நடிப்பிற்கான வாய்ப்பு குறைந்ததால் டெக்னீஷியனதாக தனது திரைபயணத்தை தொடங்கினார். அதன்பிறகு 1973-ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக அரங்கேற்றம் படம் கமல்ஹாசனுக்கு மறுவாழ்வு கொடுத்தது என்று சொல்லலாம்.
அரங்கேற்றம் படத்திற்கு பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்த கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து மற்ற இயக்குனர்களிடம் இருந்தும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அப்படிப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட கமல்ஹாசன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
Advertisment
Advertisements
இதனிடையே தனது முதல் பட அனுபவம் குறித்து பேசியுள்ள கமல், கூறுகையில், களத்தூர் கண்ணம்மா படத்தில் நான் நடிகை சாவித்ரிக்கு மகனாக நடிக்க வேண்டும் என்று சொல்லி அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது அங்கு மரங்களில் நிறைய மாம்பழம் இருந்தது. ஆனால் அது மாம்பழ சீசன் இல்லை. ஆனாலும் அனைத்து மரங்களிலும் மாம்பழம் மட்டும் இருந்தது.
ஆனாலும் மாம்பழம் சாப்பிடும் ஆசையில் அந்த பழத்தை எடுத்து கீறி பார்த்தேன் அதில் இருந்து மண் வந்தது. அதற்கு அடுத்து ஒரு உறையில் கத்தி இருக்கும் என்று உருவினேன் ஆனால் அதில் வெறும் கைப்பிடி மட்டும்தான் இருந்தது. வெயிட் இருக்க கூடாது என்று அப்படி செய்துள்ளார்கள். இப்படி எல்லாமே இப்படி எல்லமே ஏமாற்றமா இருந்துச்சு.
அதன்பிறகு ஒரு வாரம் கழித்து டெஸ்ட எல்லாம் முடிச்சிட்டு சாவித்ரி அம்மா கூட நடிக்கிற காட்சி. முதல் காட்சியே அவர் எனக்கு உப்புமா ஊட்டுவது போன்ற காட்சி. உப்புமா கொடுக்கும்போது நீ சாப்பிடனும் என்று சொன்னார்கள். நானும் சரி என் சொல்லிவிட்டு, ஆ என்று வாயயை திறந்தேன். ஆனால் உப்புமா கிட்ட வரும்போது வாயை மூடிக்கொண்டேன்.
என்னப்பா இது சாப்பிடு என்று சொன்னார்கள். இல்ல அது நீங்க சாப்பிட்டு காட்டுங்க என்று சொன்னேன். ஏன்னா மாங்காயில் மண்ணு இருக்கு, கத்தி உறையில வெறும் கைப்பிடிதான் இருக்கு அதேபோல் உப்புமா மண்ணா இருக்காதுனு எனக்கு என்ன தெரியும் என்று கேட்டதாக கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil