திரையரங்குகளில் விற்பனை செய்யும் தின் பண்டங்களின் விலையை அரசு கட்டுபடுத்த வேண்டும் அல்லது பொதுமக்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும் இல்லையேனில் விரைவில் திரையரங்குகள் இழுத்து மூடப்படும் என்பது உறுதி என கோவையில் பிரபல நடிகர் கராத்தே ராஜன் கூறியுள்ளார்.
டாக்டர் ஆர்.பாண்டியன் புராடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஆர். பாண்டியன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் வஞ்சகம். இத்திரைப்படத்தின் படபூஜை நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் கதாநாயகனாக ஆர்.பாண்டியனும், கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த ஐஷ்வர்யா அனீலா நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தின் படபிடிப்பு இன்று முதல் கோவை மாவட்டம் தடாகம், பொள்ளாச்சி, மற்றும் தமிழகம் கேரளா ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இயக்குனர் சாய் ஆனந்த் இயக்கும் இத்திரைப்படத்தில் லிவிங்ஸ்டன், நான் கடவுள் ராஜேந்திரன், கராத்தே ராஜன் உள்ளிட்ட பல முண்ணனி நடிகர்கள் நடிக்க உள்ளனர். படபூஜையின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் கராத்தே ராஜன் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
வஞ்சகம் என்ற திரைப்படம் படத்தின் பெயருக்கு ஏற்ற வகையில் நல்ல கதையம்சத்துடன் உள்ளது. மூன்று மொழிகளில் இத்திரைப்படத்தை எடுக்க உள்ளனர், இன்னும் 6"மாத காலத்திற்க்குள் வெள்ளிதிரையில் இத்திரைபடம் வெளியாகும். திரையரங்குகளில் ரசிகர்களின் என்னிக்கை குறைத்து வருகிறது. தமிழக அரசு திரையரங்கு வளர்ச்சிக்கு இரண்டு காரியங்களை செய்ய வேண்டும்
அதாவது திரையரங்குகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்களின் விற்பனையை எம்ஆர்பி என்ற விலை நிர்ணயத்திற்க்குள் கொண்டு வர வேண்டும் அல்லுது பொதுமக்கள் கொண்டு வருகின்ற தின்பண்டங்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் திரையரங்கு டிக்கெட் விலை 150"முதல் 300" வரை என்ற நிலையில் ஒரு பாப்கார்ன் விலை 400"ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
படம் பார்க்க வருகின்ற பலரும் திரையரங்குகளில் விற்பனை செய்யபடும் தின்பண்டங்களின் விலையை மட்டும் கேட்டுவிட்டு வாங்காமல் செல்லும் நிலை உள்ளது. இவற்றை அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களை திரையரங்கிற்க்கு வந்து படம் பார்க்க வைக்க முடியும் என்றார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“