ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தாரா கார்த்தி? ஜப்பான் ட்விட்டர் விமர்சனம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள ஜப்பான் படம் குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள ஜப்பான் படம் குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Japan Movi

ஜப்பான் படம்

கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஜப்பான் படம் குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

குக்கூ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராஜூ முருகன், கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ஜிப்சி என்ற படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கியுள்ள படம் ஜப்பான். கார்த்தி, அனு இமானுவேல் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அழைக்கப்பட்டுள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (நவம்பர் 10) வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு கார்த்தியுடன் இணைந்து ஏழாவது படம் இதுவாகும். மேலும் இயக்குனர் ராஜூ முருகனை அழைத்த கார்த்தி தனக்கான ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்யுமாறு கூறியதாகவும், அப்படி உருவானது தான் ஜப்பான் என்றும் தகவல் வெளியாகியுளளது. இந்த படத்தில் கார்த்தி புதிய உச்சரிப்பு, உடல் மொழி, பாணி மற்றும் தோற்றத்திற்கு ஏற்றவாறு பலவற்றை மாற்றிக்கொண்டு நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

ஜப்பான் படத்தின் ரசிகர் ஷோ பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். தற்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: