சீரியலில் நடிக்கிறாரா நடிகர் கார்த்தி? பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினருடன் வைரல் போட்டோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வது சீசனில் முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து, மற்றும் ஹேமா ராஜ்குமார் ஆகியோர் மட்டுமே 2-வது சீசனில் நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வது சீசனில் முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து, மற்றும் ஹேமா ராஜ்குமார் ஆகியோர் மட்டுமே 2-வது சீசனில் நடித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Pandian Stores Karthi

பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினருடன் கார்த்தி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது 2-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. முதல் சீசன் சகோதர பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில், 2-வது சீசன் தந்தை மற்றும் மகன்களுக்கு இடையிலான பாசப்போராட்டத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து, மற்றும் ஹேமா ராஜ்குமார் ஆகியோர் மட்டுமே 2-வது சீசனில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவை நடிகர் கார்த்தி சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது, வா வாத்தியாரே மற்றும் மெய் அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 96 படத்தின் இயக்குனர் பிரேம் இயக்கும் மெய் அழகன் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ள கார்த்தி, ஓய்வில்லலாமல் அடுத்தடுத்து நடித்து வருகிறார்,

மேலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2, எச்.வினோத் இயக்கத்தில்  தீரன் 2 உள்ளிட்ட 2ம் பாக படங்களை கைவசம் வைத்துள்ள கார்த்தி, தற்போது நலன் குமாராசாமி இயக்கத்தில் நடித்து வரும் வா வாத்தியாரே படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். சென்னை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதே பிலிம்சிட்டியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2 சீரியலின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Advertisment
Advertisements

இது பற்றி தெரிந்துகொண்ட கார்த்தி, பாண்டியன் ஸ்டோர்ஸ் படக்குழுவை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். கார்த்தியை பார்த்த படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியடைந்த நிலையில், அவருடன் மகிழ்ச்சியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாண்டியன ஸ்டோர்ஸ் சீரியலில் கார்த்தி நடிக்கிறாரா என்று கேட்டு வருகின்றனர்.

அதேபோல் ஜெயம் ரவி நடித்து வரும் ஜீனி படத்தின் படப்பிடிப்பும் இதே ஸ்டூடியோவில் நடைபெற்று வரும் நிலையில், இடைவேளை நேரத்தில் இருவரும் சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: