Karthi Salary for Meiyazhagan Movie: 96 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள மெய்யழகன் படத்தில், நாயகனாக நடித்துள்ள கார்த்தியின் சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் கார்த்தி. கடந்த 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக புதுமுக இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வரும் கார்த்தி, முதல் படம் இயக்கிய பல இயக்குனர்களுக்கு தனது நடிப்பில் 2-வது படம் இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அந்த வகையில் தயாராகியுள்ள ஒரு படம் தான் மெய்யழகன். விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள 2-வது படமாக மெய்யழகன் படத்தில், கார்த்தியுடன், அரவிந்த் சாமி, ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், கார்த்தி நடிப்பில் கடைசியான வெளியான அவரின் 25-வது படமாக ஜப்பான் படுதோல்வியை சந்தித்த நிலையில், மெய்யழகன் படத்தின் மூலம் அந்த தோல்வியை சரிக்கட்ட வேண்டும் என்று கார்த்தியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு மெய்யழகன் படம் திரையிடப்பட்டுள்ளது. இதற்கு விமர்சனங்கள் பாசிட்டீவாக வந்துள்ளதால், நாளை (செப்டமபர் 27) படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர்.
சூர்யாவின் 2டி என்டர்டெய்ண்மெட் நிறுவனம் தயாரித்துள்ள மெய்யழகன் படத்திற்காக கார்த்தி சுமார் 15-20 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பான் படம் தோல்வியை சந்தித்திருந்தாலும், கார்த்தி அடுத்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் 2-ம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே சமயம் மெய்யழகன் படத்தில் கார்த்தியின் சம்பளம் 20 கோடி என்பது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனாலும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“