தன்னைப்பற்றி அவதூறாக பேசி வரும் பாடகி சுசித்ராவுக்கு எதிரான நடிகர் கார்த்திக் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுசித்ராவுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
2000-ம் ஆண்டு வெளியான அலைப்பாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் குமார். ஸ்டாண்டப் காமெடியானா இவர், தொடர்ந்து, பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு பாடகி சுசித்ராவை திருமணம் செய்துகொண்டார். 12 வருடங்கள் இவர்கள் திருமண வாழ்க்கை தொடந்த நிலையில், 2017-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
தற்போது அமிர்தா ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்துகொண்ட கார்த்திக் குமார் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் குறித்து பல சர்ச்சையாக கருத்துக்களை கூறி வருகிறார். கார்த்திக் குமாரை ஓரினச்சேர்க்கையாளர் என்று சுசித்ரா கூறியது பெரும் வைரலாக பரவியது. இதற்கு கார்த்திக் குமாரும் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே, பாடகி சுசித்ரா தன்னை பற்றியும் தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும் அவதூறான கருத்துக்களை பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறிய கார்த்திக் குமார் சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடுக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் பாடகி சுசித்ரா, தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து பாடகி சுசித்ராவிற்கு நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, இடைக்கால தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“