தமிழ் சினிமாவின் பிரபல பாடகியாக சுசித்ரா தனது முன்னாள் கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள நிலையில், அதற்கு அவரது கணவர் கார்த்திக் குமார் பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடகியாக பிரமான சுசித்ரா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நடிகைளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சுசீ லீக்ஸ் என்ற ஹேஸ்டேக் மூலம் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வந்தார். இந்த புகைப்படங்கள் அப்போது இணையத்தில் பெரும் வைரலாக பரவிய நிலையிலும், சுசித்ரா அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே சுசீ லீக்ஸ் வெளியான சில மாதங்களில் சுசித்ரா மனநிலை சரியில்லாதவர் என்று கூறி அவரது கணவர் கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகு சுசித்ரா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இல்லாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனியார் சேனலக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியில் சுசீல லீக்ஸ்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார்.
மேலும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. அவர் தனது நண்பர்களுடன் அடிக்கடி மும்பை சென்றுவிடுவார் என்று கூறியிருந்த சுசித்ரா, இந்த பேட்டியில் பயில்வான் ரங்கராதன், நடிகை த்ரிஷா மற்றும நடிகர் தனுஷ் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சனங்களை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவியது.
இதனிடையே தனது முன்னாள் மனைவியின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள கார்த்திக் குமார், நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்படபோவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும், அதை பெருமையாக கருதுகிறேன். அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில்எந்த அவமானமும் இல்லை பெருமை மட்டுமே என்று கூறியுள்ளார். நடிகர் கார்த்திக் குமாரின் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“