/indian-express-tamil/media/media_files/2025/09/21/kain-and-prabu-2025-09-21-11-26-46.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த சிவாஜி கணேசன் வீட்டு விருந்து குறித்து பல நடிகர்கள் பேசியிருக்கிறார்கள். தற்போது சிவாஜி இல்லை என்றாலும் அவரது மகன் பிரபு, அந்த விருந்தோம்பல் செய்வதை சரியாக கடைபிடித்து வருவதாக இன்றைய நட்சத்திரங்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் கிஸ் படக்குழுவினர் பிரபு வீட்டு விருந்து குறித்து பேசியுள்ளனர்.
டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம கிஸ். ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், விடிவி கணேஷ், ரியோ ரமேஷ், தேவயானி, ஆகியோருடன், விஜய் சேதுபதி கதையை எடுத்து சொல்பவராக வருகிறார். பிரபு இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் என்பவர் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த செப்ம்பர் 19-ந் தேதி வெளியானது. வாழ்க்கையில் ஒரு மனிதனின் முதல் முத்தம் தொடர்பாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக, கவின், இயக்குனர் சதீஷ் உள்ளிட்டோர் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். இதில் பேசிய இயக்குனர் சதீஷ் பிரபு வீட்டு விருந்து குறித்து ஆச்சரியாக பேசியுள்ளார். நான் கதை சொல்ல அங்கு போகும்போது சிவாஜி படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அமர்ந்தேன். அப்போது ஒரு ஸ்வீட், ஒரு சமோசா, ஒரு காபி கொடுத்தார்கள். அந்த சுவீட் நெய்யில் மிதக்கிறது. தட்தை சாய்த்து பிடித்தால் சுவீட் தட்டிலே ஓடும் அளவுக்கு நெய் அதிகமாக சரியாக டேஸ்டாக இருந்தது. அதேபால் அவர் கொடுத்த காபி வித்தியாசமானது.
நம்ம வீட்டில் காபி கொடுத்தால், அதில் தண்ணீர் தான் அதிகமாக இருக்கிறது என்பதையே நான் பிரபு சார் வீட்டு காபி குடித்து தான் தெரிந்துகொண்டேன். அந்த அளவிற்க அந்த காபி ரொம்ப திக்காக இருந்தது. நமது வீட்டில், கிராம் கணக்கில் இருக்கும் மளிகை பொருட்க் எல்லாம், அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக வைத்திருக்கிறார். அவர் வீட்டு கிச்சனைத்தான் பார்க்க வேண்டும் என்று நான் விருப்பப்பட்டேன். அதேபோல் அவர் கொடுத்த உபசரிப்பை பார்த்து இந்த படத்தில் பொய் சொல்லியாவது அவரை கமட் செய்துவிட வேண்டும் என்ற நினைத்தேன். அந்த அளவுக்கு டேஸ்டியான விருந்து என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய கவின், படப்பிடிப்புக்கு ஒரு கேரியர் வரும், அதில் என்னென்ன இருந்தது என்று அவருக்கு தெரியும். அதை நம்மிடம் கேட்பாா .என்னென்ன சாப்டீங், என்று ஒருமுறை கேட்டார். நான் சிக்கன் சாப்பிட்டுடேன் என்று சொல்ல போக, அப்போ ஸ்வீட் சாப்பிடலையா என்று கேட்டார். நான் ஆச்சரியமாக ஷாட் முடித்துவிட்டு வந்து சாப்பிடுகிறேன் சார் என்று சொன்னேன். ஸ்வீட்டும் பிரபு சாரும் ஒன்னு. பிரிக்கவே முடியது என கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.