கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் யுவன் இசையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் "ஸ்டார்" படத்தின் முழு விமர்சனம்
கதைக்களம் :
சிறுவயதில் இருந்தே நடிகனாக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் கவின். நடுத்தர குடும்பத்தில் பிறந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோட ஓடும் கவின், பல அவமானங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறார். இந்நிலையில் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின் போது கவினுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட, இதிலிருந்து அவர் மீண்டாரா ? சினிமாவின் நடிகனாக சாதித்தாரா? என்பதே மீதி கதை
நடிகர்களின் நடிப்பு :
நடிகர் கவினின் கேரியர் பெஸ்ட் ரோல் என இப்படத்தை எளிதாக கூறிவிடலாம். அந்த அளவிற்கு அக்கதாபாத்திரத்தின் வலியையும், போராட்டத்தையும், முயற்சியையும் நம்மில் ஒருவராக திரையில் பிரதிபலித்திருக்கும் கவின் என்னும் கலைஞனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவனாக, இளைஞனாக, அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளராக, வாய்ப்பை தேடி ஓடும் மனிதனாக என பல்வேறு பரிமாணங்களில் கலக்கி இருக்கிறார்.
கனவை துரத்தும் ஒவ்வொரு மனிதனையும் கவினின் நடிப்பு கலங்க வைக்கும் என்பது உறுதி. மகனின் கனவுக்கு உறுதுணையாக இருக்கும் தந்தையாக லாலின் நடிப்பு மிரட்டல். அதேபோல் நாயகிககளான அதிதி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்கம்
"பியார் பிரேம காதல்" படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் இளன் இரண்டாவதாக இயக்கியிருக்கும் படம் ”ஸ்டார்”. நடிகனாக வேண்டும் என்ற கனவுக்காக போராடும் இளைஞனின் வாழ்க்கை தான் படத்தின் கதை என்பதை ட்ரைலரிலேயே சொல்லிவிட்டார் இயக்குனர். படத்தின் திரைக்கதையில் எதோ ஒரு இடத்தில் ஒவ்வொருவரையும் தங்கள் வாழ்வோடு கனெக்ட் செய்ய வைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இளன்.
யுவனின் இசை
கடந்த சில படங்களாக யுவனின் இசை மீது சில விமர்சனங்கள் எழுந்தது. அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இப்படத்தின் இசையையும், பாடல்களையும் அல்டிமேட்டாக அமைத்து தான் "மியூசிக்கின் கிங்" என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். யுவன் ரசிகர்களுக்கு படத்தில் ஒரு கூஸ்பம்ப்ஸ் சர்ப்ரைஸ் இருக்கிறது.
படத்தின் ப்ளஸ் :
கவின் Performance
லால் மற்றும் கீதா கைலாசத்தின் நடிப்பு
யுவன் மியூசிக்
எமோஷனல் காட்சிகள்
3 கூஸ்பம்ப்ஸ் சர்ப்ரைஸ் காட்சிகள்
Best கிளைமாக்ஸ்
வசனங்கள்
படத்தின் மைனஸ் :
தேவையில்லாத காதல் காட்சிகள்
சற்று தொய்வான இரண்டாம் பாதி
ஒரு சில இடங்களில் படம் கதையை விட்டு வேறு எங்கேயோ செல்வது போல தோன்றுகிறது
மொத்தத்தில் சினிமாவில் சாதிக்க விரும்புவோருக்கு இப்படம் நிச்சயம் மனதை வருடும். சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் நம் லட்சியத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து உழைத்தால் ஏதேனும் ஒருநாள் இந்த பிரபஞ்சம் நமக்கான வெற்றியை கொடுக்கும் என்ற பாசிட்டிவ் எண்ணத்தை படம் பார்க்கும் அனைவரது மனதிலும் விதைத்திருக்கிறது இந்த "ஸ்டார்"
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.