பொதுவாழ்க்கையில் விஜயகாந்த் வடிவேலு இருவருக்கும் இடையே மோதல் இருந்தாலும் உள்ளுக்குள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளனர் என்று பிரபல காமெடி நடிகர் கிங்காங் கூறியுள்ளார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம் வடிவேலு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தாலும், வடிவேலுவுடன் நடித்த காட்சிகள் தான் பெரிய ரீச் கிடைத்தது. சமீபத்தில் வெளியான நாய் சேகர் படத்தில் கூட நடிக்க வாய்ப்பு கேட்டு வடிவேலுவை சந்திக்க முயற்சி செய்தேன்.
அவர் கூப்பிடுகிறேன் என்று சொன்னார். ஆனால் கூப்பிடவே இல்லை . 3 முறை அவரை பார்க்க முயற்சித்தேன். ஆனால் நடக்கவில்லை. கூப்பிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். கூப்பிடவே இல்லை. நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் பார்த்தேன். பெரிய ஸ்டார்ஸ் படம் இப்போது வெளியாகி வருகிறது. இந்த படத்தில் நாம் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம் வரும். அதே மாதிரி தான் எனக்கும் இருந்தது.
இப்போது உருவ கேலி செய்தால் அதுதான் காமெடி என்று ஆகிவிட்டது. என்னை நீங்கள் கிண்டல் செய்வது உங்களை நான் கிண்டல் செய்வதுதான் இப்போது நடந்து வருகிறது. வடிவேலுவை தாண்டி மற்ற நடிகர்களுடன் பண்ணும்போது நாம் தொடர்ந்து பண்ணுவோம் என்று சொல்வார்கள் ஆனால் அடுத்து அழைக்க மாட்டார்கள்.

நடிகர் மன்சூர் அலிகான் மகள் திருமண வரவேற்புக்கு நான் சென்றிருந்தேன். அங்கு பல நடிகர்கள் வந்தார்கள். திடீரேன்று விஜயகாந்த் சார் அங்கு வந்தவுடன் மண்டபமே பரபரப்பானது. சரி எப்படியாவது அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு கிளம்பிடலாம் என்று நினைத்து கூட்டத்தின் உள்ளே புகுந்து வணக்கம் சார் என்று சொன்னேன்.
என்னை பார்த்த விஜயகாந்த் அவருக்கு அருகில் அமர வைத்தார். ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தார். அப்போது அவர் வடிவேலு காமெடி தான் நான் பார்க்கிறேன். நைட் 11 மணிக்கு மேல ஆனா இதேதோன் எனது வேலை என்று அவர் பார்த்த காமெடி காட்சிகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். வடிவேலுவும் விஜயகாந்தும் வெளியில் எப்படி இருந்தாலும் நல்ல மரியாதை வைத்திருக்கிறார்கள்.
விஜயகாந்த் சார் மாதிரி நான் நடிப்பேன். அப்போது வடிவேலு ஷூட்டிங்கில் ப்ரியாக இருக்கும்போது அதை செய்ய சொல்லி பார்த்து ரசிப்பார். விஜயகாந்த் சார் வடிவேலு காமெடியை பார்க்கிறார். விஜயகாந்த் சார் நடிப்பது போன்று செய்தால் வடிவேலு ரசிக்கிறார் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil