தவக்களை உன்ன மாதிரியே இருக்கான், நீயும் நடி; கிங்காங் சினிமா வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்: முதல் படம் எது?

ஊர்காரர்களும், தவக்களை உன்னை மாதிரியே இருந்து திரைப்படத்தில் நடிக்கிறான். நீயும் திரைப்படத்தில் நடி என்று கூறியுள்ளனர்.

ஊர்காரர்களும், தவக்களை உன்னை மாதிரியே இருந்து திரைப்படத்தில் நடிக்கிறான். நீயும் திரைப்படத்தில் நடி என்று கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Kingkong shankar

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி என்றால் அது நடிகர் கிங்காங்க அவரின் மகள் திருமணம் தான். தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், பிரபல நடிகர்கள் ஒருசிலர் பங்கேற்றிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ என்ட்ரியாக வந்து மணமக்களை வாழ்த்தி சென்றார். தற்போது பல நடிகர்கள் அவரது வீட்டுக்கு வந்து மணமக்களை சந்தித்து வருகின்றனர்.

Advertisment

பல திறமைகளை உள்ளடக்கிய கிங்காங் இயற்பெறர் சங்கர். 13 வயது முதல் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை மகிழ்வித்து வந்த இவர், முந்தானை முடிச்சு திரைப்படம் வெளியானபோது, அதில் நடித்த தவக்களை என்பவரை பார்த்துள்ளார். அந்த படத்தை பார்த்த இவரது ஊர்காரர்களும், தவக்களை உன்னை மாதிரியே இருந்து திரைப்படத்தில் நடிக்கிறான். நீயும் திரைப்படத்தில் நடி என்று கூறியுள்ளனர். அதனால் நடிப்பில் மீது ஆர்வத்துடன் இருந்த கிங்காங்  எப்படி சினிமாவில் வருவது என்று தெரியவில்லை.

இது குறித்து தனது அக்காவின் கணவரிடம் கேட்டபோது, அவர் தனது சொந்தக்காரர் ஒருவர் சென்னையில் இருப்பதாக கூறி அவரிடம் அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு சென்னை வந்த கிங்காங் பல இடங்களில் சினிமா வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளார். அப்படி அவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கலைப்புலி ஜி.சேகரன். 1988-ம் ஆண்டு தான் இயக்கிய ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் படத்தில் கிங்காங்கை அறிமுகம் செய்துள்ளார்.

பாண்டியராஜன், பல்லவி, செந்தில், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் காமெடியில் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், நாயகம் என்ற சிறிய கேரக்டரிலும் கலைப்புலி ஜி.சேகரன் நடித்திருப்பார். கல்யாண வீடுகளில், மொய் பணம் ஏமாற்றுவது, சாதாரன நாற்காலியை நவாப் நாற்கலி என்று பொய் சொல்லி விற்பது என மோசடி செய்துகொண்டிருக்கும் பாண்டியராஜன், தனது அப்பாவின் சொத்துக்கள் கிடைக்கும்போது என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை.

Advertisment
Advertisements

இந்த படத்தில் ஒரு முக்கிய நடித்திருந்த கிங்காங், அடுத்து பாண்டியரஜன் இயக்கிய நெத்தியடி, ரஜினிகாந்தின் அதிசய பிறவி, ஜமீன் கோட்டை, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நிலையில், ஒரு காமெடி காட்சிகளில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக போக்கிரி படத்தில் வரும் லாரி டிரைவர், கந்தசாமி படத்தில் வரும் திருடன், கருப்புசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கில் ராஜா விக்ரமா என்ற படத்தில் சிரஞ்சீவி, கன்னடத்தில் குண்டுகாளி என்ற படத்தில் சிவராஜ்குமார், இந்தியில் பாவி நம்பர் ஒன் படத்தில் சல்மான்கான், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய சினிமாவில் 4 சூப்பர்ஸ்டார்களுடன் நடித்துள்ளார். ஒருமுறை மும்பை சென்றிருந்தபோது இவருக்கு ஆதார் அட்டை இல்லாததால், மும்பை விமான நிலைய அதிகாரிகள் இவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளனர்.

அப்போது என்ன செய்வது என்று தெரியாத, நடிகர் மீசை ராஜேந்திரன், இவர் தமிழ் நடிகர் என்று சொல்ல அவர்கள் நம்ப மறுத்துள்ளனர். அதன்பிறகு கிங்காங், தான் நடிகர் ஷாருக்கானுடன் இருக்கும் போட்டோவை காட்டியுள்ளார், இதை பார்த்தவுடன் அவர்கள் அவரை விமான நிலையத்திற்குள அனுமதித்துள்ளனர். இந்த தகவலை, சினியுலகம் நேர்காணலில் நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: