Advertisment

தளபதி அழைத்தாலும் வாய்ப்பு இல்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாலா : என்ன நடந்தது?

மாற்றம் என்ற பெயரில் மக்களுக்கு உதவி செய்து வரும் கே.பி.ஒய் பாலா, தனது அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
KPY Bala

கே.பி.ஒய். பாலா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவி செய்து வரும் சின்னத்திரை நடிகர் பாலா, அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வரும் நிலையில், இந்த கேள்விகளுக்கு தற்போது பாலா பதில் அளித்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கே.பி.ஒய்.பாலா. தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் சமூக ஆர்வலராக தன்னை தேடி வரும் பலருக்கும் உதவி செய்யும் பாலா, மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கி உதவியுள்ளார்.

தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மாறியுள்ள பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று அசத்தியிருந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் இருக்கும் பாலா, சமீபத்தில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவி செய்துள்ளார். மேலும் தனது வருமானத்தில் பெரும்பகுதியை மக்கள் நலனுக்காக செலவிடும் பாலா, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மேலும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்சுடன் இணைந்து மாற்றம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ள பாலா, அதன்மூலம் பலதரப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பாலா குறித்து மக்களுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்து வருகிறது. மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்குவது, உதவி செய்வது இதை பார்த்து பாலா விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.

சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற தனியார் கல்லுரி கண்காட்சி விழாவில் கலந்துகொண்ட பாலா, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாலா, அரசியல் குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதில் எனக்கு போதிய அறிவு இல்லாத காரணத்தால், அரசியலில் இறங்க மாட்டேன். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அழைத்தாலும் அரசியலில் இறங்க மாட்டேன்.

தற்போது கூடுதலாக உழைத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மக்களுக்கு உதவி செய்கிறேன். திருமணத்திற்கு பிறகும் மக்கள் பணி தொடரும் என்று கூறியுள்ளார். கடந்த சில தினங்களாக லாரன்ஸ் மாற்றம் என்ற இயக்கத்தை தளபதி விஜயின் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில். தற்போது இந்த வதந்திக்கு பாலா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

KPY Bala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment