தமிழ் சினிமாவில் நடிகராகவும் அரசியல் தலைவராகவும் முத்திரை பதித்திருந்த எம்.ஜி.ஆர், பலருக்கும் உதவி செய்துள்ள நிலையில், அவருக்கே ஒரு நடிகை நிதியுதவி அளித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முக திறமையுடன் வலம் வந்த எம்.ஜி.ஆர், சிறுவயதில் நாடக நடிகராக இருந்து திரைத்துறையில் அறிமுகமானவர். ஆரம்பத்தில் பல தடைகளை கடந்த இவர், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்றே சொல்லலாம். தனது படங்களில் என்ன இருக்க வேண்டும் என்ன இருக்க கூடாது என்று முடிவு செய்வது எம்.ஜி.ஆர் என்ற நிலை இருந்து வந்தது.
மேலும் தனது படங்களின் மூலம் பல நடிகைகளை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் மூலம் நடிகை லதாவை அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தில் நடிக்க லதா தேர்வானபோது, பல நடிகைகளை நான் அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். அதன்பிறகு அவர்கள் பல பட வாய்ப்புகள் கிடைத்து, முன்னணி ஹீரோயினாக உயர்ந்தபின் என் படங்களில் நடிக்க, நானே கால்ஷீட் கேட்டு அவர்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அதன் காரணமாக இந்த படத்தில் என்னுடன் இணைந்து நடிக்கும் நீ, அடுத்த 5 வருடத்திற்கு எனக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று கூறி லதாவிடம் கான்ட்ராக்ட் போட்டுள்ளார். அதன்படி லதாவும் 5 வருடங்கள் எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் தனியாக கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், அதிமுகவில் 3வது பெண் பிரபமுகராக லதாவை இணைத்துள்ளார். அப்போதே அரசியலுக்கு வா உங்க அப்பா எல்லாம் அரசியலில் இருந்தவர் தானே என்று அழைத்துள்ளார்.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது 22 வயதில் இருந்த லதா எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர், கட்சியின் நீதான் 3-வது பெண் பிரமுகர் கட்சிக்காக என்ன செய்ய போகிறாய் என்று கேட்க, நாட்டியத்தில் ஆர்வம் கொண்ட நடிகை லதா, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அந்த காலக்கட்டத்திலேயே ரூ30 லட்சம் கட்சிக்கு நிதியாக கொடுத்துள்ளார். இதை பார்த்த எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் நான் தான் கொடுப்பேன். நீ எனக்கே நிதி கொடுக்கிறாயா என்று கேட்டுள்ளார். இது குறித்து லதா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“