scorecardresearch

லியோ படத்தில் இணைகிறாரா லெஜெண்ட்? காஷ்மீரில் இருந்து வெளியான வைரல் க்ளிக்ஸ்

கடந்த ஆண்டு வெளியான லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகர் தயாரிப்பாளராக அறிமுகமானவர் லெஜெணட் சரவணா

லியோ படத்தில் இணைகிறாரா லெஜெண்ட்? காஷ்மீரில் இருந்து வெளியான வைரல் க்ளிக்ஸ்

சரவணா ஸ்டோர் உரிமையாளராக லெஜெண்ட் சரவணன் தற்போது காஷ்மீரில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர் விஜயின் லியோ படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனது நிறுவனமாக சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான அருள் சரவணன், கடந்த ஆண்டு வெளியான லெஜெண்ட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகர் தயாரிப்பாளராக அறிமுகமானார். ஜேடி – ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

5 மொழிகளில் வெளியான லெஜெண்ட் படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், அருள் சரவணன் தான் அடுத்து நடிக்கும் படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே அருள் சரவணன் தற்போது காஷ்மீரில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹோட்டலில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவில் காஷ்மீரில் லெஜெண்ட் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் காஷ்மீரில் நடைபெற்று வரும் விஜயின் லியோ படத்தின் படப்பிடிப்பில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக கூறி வருகின்றனர். இதனிடையே இன்று, அருள் சரவணன் காஷ்மீர் பனிப்பொழிவுக்கு நடுவில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் விரைவில் சுவரஸ்யமான தகவலை வெளியிடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், உண்மையிலேயே லெஜெண்ட் சரவணன் லியோ படத்தில் நடிக்கிறாரா என்றும், சுவரஸ்யமாக தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம் லெஜண்ட் சரவணா லியோ படத்தில் நடிப்பது குறித்து படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor legend saravana kashmir photos viral