/indian-express-tamil/media/media_files/2025/09/26/santhanam-manohar-2025-09-26-13-22-24.jpg)
எனது மகனை ஹீரோவாக நடிக்க வைப்பதாக கூறி, பலர் என்னிடம் பல லட்சங்கள் மோசடி செய்துள்ளனர். இதை தெரிந்து, நடிகர் சந்தானம் என்னை கண்டபடி திட்டி, விட்டார். ஆனாலும் என் மீது அளவுகடந்த பாசம் என்று லொள்ளு சபா மனோகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கிய லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மனோகர். 2008-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், பல ஹிட்டான திரைப்படங்களை ரோஸ்ட் செய்து, காமெடியாக சொல்லியிருப்பார்கள். அடுத்து 2010-ம் ஆண்டு மாமா மாப்பிள்ளை, 2021-ல் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
2009-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான லாடம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மனோகர், தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார், குறிப்பாக, மாஞ்சா வேலு, அலெக்ஸ் பாண்டியன், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்து காமெடியில் கலக்கியுள்ள மனோகர், தனக்கென தனி பாடிலாங்வேஜ் வைத்துக்கொண்டு அதையே மக்களை சிரிக்க வைக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தியவர்.
பல வெற்றிப்படங்களில் சந்தானத்துடன் நடித்துள்ள மனோகர், தனியாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் சந்தானத்திற்கு மனோகர் மீது தனி பாசம். தனது பல நேர்காணல்களில் கூட, மனோகர் பற்றி பல தகவல்களை சந்தானம் பகிர்ந்துகொண்டுள்ளார். இதனிடையே, சினியுலகம் யூடியூப் சேனலில் பேசிய மனோகர், சந்தானம் பற்றி பேசியுள்ளார். சமீபத்தில் தான் கட்டிய வீட்டின் ஹோம்டூர் வீடியோவாக கூறிய மனோகர் சினிமாவில் தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்த வீடு கட்டியது, நான் சினிமாவில் சம்பாதித்தது, வங்கி வேலையில் சம்பாதித்தது என அனைத்தையும் சேர்த்து தான் கட்டியுள்ளேன். இந்த வீடு கட்ட ரூ80 லட்சம் செலவானது. மேலே ஒருவர் வாடகைக்கு இருக்கிறார். பக்கத்தில் ஒரு கடை வாடகைக்கு விட்டிருக்கிறேன். இந்த வருமானம் எனக்கு சரியாக இருக்கிறது. சினிமா வருமானத்தை நம்பி இல்லை. சினிமா தயாரிப்பதாக சொல்லி என்னிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளனர். எனது மகனை ஹீரோவாக நடிக்க வைப்பதாக கூறினார்கள். அதனற்காக லட்ச கணக்கில் பணம் கொடுத்தேன். ஏமாற்றிவிட்டார்கள்.
இதை பற்றி தெரிந்த நண்பர்களிடம் சொன்னால், பார்க்கலாம் பணத்தை வாங்கிவிடலாம் என்று சொல்வார்கள். ஆனால் அதன்பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள். சந்தானம் இந்த விஷயம் தெரிந்து ரொம்ப கோபப்பட்டார். ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் கேட்கடலாமே, நீ எதுக்கு தனியா போய் எல்லாரிடமும் மாட்டிக்கிற என்று, கேட்டு திட்டினார். அவருக்கு என் மேல் தனி பாசம் இருக்கிறது என்று மனோகர் மனம் திறந்து பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.