New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/mahat0.jpg)
Mahat and his Wife : தமிழ் சினிமா நடிகர் மகத் நிறைமாத கர்ப்பிணியாக தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2006-ம் ஆண்டு சிம்புவின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாள வல்லவன் படத்தில் சிம்புவின் நண்பனாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் மகத். அதனைத் தொடர்ந்து காளை படத்தில் நடித்த இவர், மங்காத்த படத்தில் அஜித்துடன் நடித்து பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து ஜில்லா பிரியாணி, வடகறி, சென்னை 28 -2, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என ஒரு சில படங்களில் நடித்துள்ள அவர், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா மற்றும்' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிராச்சி என்ற மாடல் அழகியை திருணம் செய்துகொண்டார். பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ரா தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இவருக்கு சமீபத்தில் தான் வளைகாப்பும் நடந்து முடிந்தது.
தற்போது பிராச்சி மிஸ்ரா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிராச்சி மிஸ்ரா கணவர் முகத்துடன் சேர்ந்து கருப்புநிற டைட் உடையில் மஹத்தும் மனைவிக்கு மேட்சாக, கருப்பு நிற உடையில் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.