திரைத்துறையில் அஜித் பெரிய நடிகராக இருந்தாலும், அவர் தனது பேஷனை கைவிடவில்லை. அதற்கான பலன் கிடைப்பதை பார்க்கும்போது உத்வேகமாக இருக்கிறது என்று நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு வெளியான பீட்சா தி வில்லா படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடர்ந்து, இந்தியாக பாகிஸ்தான், இன்று நேற்று நாளை, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், விக்ரம் வேதா படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், அநத படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார். அதன்பிறகு காலா படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடித்திருந்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் மூலம் கவனிக்கப்படும் நடிகரகா உருவெடுத்தார். 2023ம் ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படத்தில் நாயகனாக நடித்த மணிகண்டன், அடுத்து லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தற்போது குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் மணிகண்டன், சென்னையில், நடிகர் அஜித் குறித்து பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்குமார் நடிப்பில், விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், அவர், தற்போது துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். முதல் போட்டியில் தனது அணியுடன் பங்கேற்ற அஜித் 3-வது இடத்தை பிடித்த நிலையில், திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் மணிகண்டன், திரைத்துறையில் அஜித், மிக்பபெரிய நட்சத்திரமாக இருக்கிறார். ஆனாலும், அவர் எப்போதும் தனது பேஷனை கைவிட்டதில்லை. தற்போது அதற்கான பலன் கிடைப்பதை பார்க்கும்போது மிகவும் உத்வேகமாக இருக்கிறது. எங்களை மாதிரி ஜென்ரேஷனுக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் அஜித் சார் தான் என்று, நடிகர் அஜித்க்கு மணிகண்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“