தளபதி 67 படம் குறித்து தான் வெளியிட்ட பதிவை நீக்கிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று நடிகரும் இயக்குனருமான மனோபாலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் வாரிசு. பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சேர்ந்த பலரும் இந்த படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வாரிசு படத்திற்கு பிறகு விஜய் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே மாஸ்டர் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிகமாக தளபதி 67 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் 50 வயது நிறம்பிக கேங்ஸ்ராக நடிக்கிறார் என்றும் அவருக்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தளபதி 67 இணையத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
மேலும் இந்த படத்தின் பூஜை சத்தமில்லாமல் முக்கிய நடிகர்கள் மற்றும் பங்கேற்க சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்கியது. லோகேஷ் கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன். அதே ஆற்றல் முழுவீச்சில், முதல் நாளே தூள் என்று நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பலரும் இந்த பதிவை ரீ-ட்விட் செய்ய தொடங்கினர். ஆனால் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், அதனால் இந்த பதிவை நீக்கிவிட்டேன் என்றும் மனோபாலா தற்போது தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மனோபாலா தனது பதிவை நீக்கினாலும், ஸ்னாப்ஷாட் எடுத்து வைத்துள்ள ரசிகர்கள் அதை தற்போது இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“