இயக்குனர் ஷங்கரின் கடைசி உதவி இயக்குனராக இருந்து எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டிருந்தாலும் தனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகரும் இயக்குனர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.
1999-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. தொடர்ந்து சரத்குமார் முரளியுடன் சமுத்திரம், கடல்பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்திருந்தார். ஆனால் அவருக்கு நடிகனாக வெற்றி கிடைக்கவில்லை.
கடைசியாக 2005-ம் ஆண்டு சாதுர்யன் என்ற படத்தில் நடித்திருந்த மனோஜ், 8 வருட இடைவெளிக்கு பிறகு அன்னக்கொடி என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். நாயகனாக வெற்றி கிடைக்காத இவருக்கு வில்லனாகவும் வெற்றி கிடைக்காத நிலையில், சமீபத்தில் வெளியான ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகராக வாய்ப்பு சரியாக அமையாத மனோஜ் ஷஹ்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், மணிவண்னன் எனது அப்பா மாதிரி. ஒருமுறை என்னிட்டம் அவர் புதுசா எதாவது யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் வாழ விடமாட்டார்கள் என்று கூறினார்.
அவர் சொன்னதை ஃபாலே செய்கிறேன். ஆனால் சினிமாவில் வாய்ப்பு வரல நாமலா வாய்ப்பு தேடியும் போக முடியாது. ஆனாலும் சினிமாதான் என் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டது. அதனால் படம் இயக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள எந்திரன் படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். 8 மாதங்கள் அந்த படத்தில் வேலை பார்த்தேன். இதில் ஷங்கர் சாரின் கடைசி உதவி இயக்குனர் நான்தான்.
இந்த படத்தில் ரஜினிக்கு நான்தான் டூப். அந்த படத்தில் எல்லா சீனும் நான் டூப் போட்டுள்ளேன். அதன்பிறகும் எனக்கு சரியாக வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். தற்போது மனோஜ் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோல் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் ரீமேக்கை அடுத்து இயக்கினால் அதில் தனுஷ் தான் நாயகனாக நடிப்பார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“