எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து தான் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றால் இந்த வீட்டையே ரெண்டாக்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து, கண்ணும் கண்ணும் புலிவால் உள்ளிட்ட 2 படங்களை இயக்கயுள்ளார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு கை கொடுக்காத நிலையில், நடிகராக களமிறங்கிய மாரிமுத்து மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து நடிகராக மாரிமுத்துவுக்கு வாய்ப்பு குவிந்த நிலையில், விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடனும், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடனும் இணைந்து நடித்திருந்தார். இவரது வித்தியாசமான பேச்சும், எதார்த்தமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் தொடக்கத்தில் இருந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் மாரிமுத்துவும் ஒருவர். ஆதி குணசேகரன் கேரக்டரில் இவர் எதார்த்தமான நடிப்பும், பேச்சும் அட்டகாசமாக இருக்கிறது. சினிமாவில் கிடைத்த பாராட்டுக்களை விட மாரிமுத்துவுக்கு சீரியலில் பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் அவ்வப்போது ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியிருந்த மாரிமுத்து, "பிக்பாஸ் என்பது பெரிய ப்ளாட்ஃபார்ம். அதில் கலந்துகொண்டால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்பது உண்மைதான். ஆனால் இப்போது நான் நீண்ட ப்ராஜெக்ட்டில் இருக்கிறேன். அந்த ப்ராஜெக்ட் எனக்கு பெரிய பெயரை பெற்று தந்திருக்கிறது. அந்த சீரியலை விட்டு எங்கேயும் நகரமுடியாது.
அப்படியும் ஒருவேளை பிக்பாஸ் வீட்டுக்குள் போனால் வீட்டை ரெண்டாக்காமல் விடமாட்டேன். ஒரு உலுக்கு உலுக்கிடுவேன். நான் மட்டும் இந்த சீசனுக்குள் போனால் பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசன் தான் முதலிடத்தில் இருக்கும் என கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை நிறைவு நிறைவு செய்துள்ள நிலையில் விரைவில் 7-வது சீசன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“