எம்ஜிஆர், சிவாஜிக்கு செல்லப்பிள்ளை… இப்போது ஜெராக்ஸ் கடை ஓனர்

Tamil Cinema Update : நாகேஷ் நடிப்பில் வெளியான சாது மிரண்டால் படத்தில் நடிகை குட்டி பத்மினியின் மகனாக திரையுலகில் அறிமுகமானார் மாஸ்டர் பிரபாகர்.

Tamil Cinema Actor Master Prabhakar Lifestyle : தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பிரபாகரன். கடந்த காலங்களில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்பிஆர், சிவாஜி, நாகேஷ், ஜெய்சங்கர், உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த பிரபாகரன் திரையுலகில் மாஸ்டர் பிரபாகரனாக வலம் வந்தார்.

கடந்த 1957-ம் ஆண்டு மதுரையில் பிறந்த பிரபாகரன், தனது 6-வது வயதில் 1963-ல் தனது உறவினர் ஒருவருடன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு 1966-ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளியான சாது மிரண்டால் படத்தில் நடிகை குட்டி பத்மினியின் மகனாக திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து எம்ஜிஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் குழந்தை நட்சத்திரமாக பல படங்பகளில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த திருமலை தென்குமரி, பாமா விஜயம், முன்றெழுத்து உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் 1969-ம் ஆண்டு வெளியான வா ராஜா வா என்ற படத்தில் நாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த மாஸ்டர் பிரபாகரன், இவர் தமிழில் கடைசியாக ஈரம் படத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில், சென்னையில், ஸ்வஸ்த்தி என்ற ஜொராக்ஸ் கடையை நடத்தி வருகிறார்.

சென்னையில் முதன் முதலில் கலர் ஜெராக்ஸ் கொண்டு வந்த பெருமை பிரபாகரையே சாரும். சமீபத்தில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட அவர் கூறுகையில்,

நான் இதுவரை 155 படங்களுக்குமெல் நடித்துள்ளேன். நான் தற்போது ஜெராக்ஸ கடை வைத்திருப்பதால், அங்கு வரும் சிலருக்கு என்னை தெரிந்திருக்கும் ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் நான் இதுவரை யாரிடமும் நடிகன் என்று சொன்னது கிடையாது. அதேபோல் என் கடைக்கு வரும் என்னை தெரியாதவர்கள் பேசினால் பேசுவேன். அப்படிதான் இயக்குநர் அறிவழகன் எனக்கு பழக்கமானார்.. அதன்பிறகு அவர் இயக்கிய ஈரம் படத்தில் என்னை நடிக்க வைத்தார். நான் நடித்த வா ராஜா வா படத்தில் மகாபலிபுரம் பற்றி சொல்லியிருப்போம். இப்போது பிரதமர் கூட அந்த படத்தை பார்த்து மகாபலிபுரத்தை பற்றி தெரிந்துகொண்டார். என்று கூறினார்கள்.

ஆனால் இது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடித்தேன் என்று கூறியுள்ளார். மேலும் திரைத்துறையில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போது சிவாஜி மற்றும் எம்ஜிஆர் போன்ற முன்னணி நடிகர்கள் தன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததாகவும் கூறிப்பிட்டுள்ளார் தற்போது இவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actor master prabhkar lifestyle update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com